உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படர்க்கை 'இ' விகுதி

47

அச்சு (அச்சன்) அச்சி என்னும் பெயர்கள், தொடர்மொழி யுறுப்பாக, முறையே தாய் தந்தைப் பொருளில் வழங்கிவருகின்றன.

அப்பச்சு = அப்பனின் தந்தை பாட்டன் (பாண்டிநாட்டு வழக்கு) அம்மாச்சி = அம்மையின் தாய் = பாட்டி (சோழநாட்டு வழக்கு) அப்பச்சு என்பது அப்பச்சி எனத் திரிந்து வழங்குகின்றது.

அருமையும் பெருமையும்பற்றி, பருவமடைந்துள்ள ஆடவரையும் பெண்டிரையும் தாய்தந்தையரைக் குறிக்கும் முறைப்பெயரால் அழைக்கும் வழக்கம், நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதால், அப் பெயர்கள் ஆண்பாற் பெண்பாற் பெயரீற்றுத் தன்மையடைந்துள்ளன. ஓர் ஆடவரை ஐயா என்றும், ஒரு பெண்டை அம்மா என்றும் அழைத்தல் காண்க. அம்மை அல்லது அம்மா என்னும் பெயர், இயற்பெயரும் தொழில்பற்றிய பொதுப் பெயருமான பெண்பாற் பெயர்களின் ஈறாகப் பெருவழக்காய் வழங்கி வருகின்றது.

எ-டு : பொன்னம்மை, பொன்னம்மா

தாயம்மை, தாயம்மா

}

இயற்பெயர்

வாத்தியாரம்மா, டாக்டர் அம்மா - தொழில் பற்றிய

பெண்பாற் பொதுப்பெயர்

இங்ஙனமே, அத்தி அச்சி என்னும் தாய்முறைப் பெயர்களும், குலமும் தொழிலும் குணமும் நிறமும் நிலைமையும் பிறவும் பற்றிய பெண்பாற் பொதுப்பெயர்களின் ஈறாக வழங்கி வருகின்றன.

எ-டு : குற + அத்தி = குறத்தி

தட்டா(ன்) + அத்தி = தட்டாத்தி

=

பறை + அச்சி = பறைச்சி

வலை + அச்சி வலைச்சி

உபாத்தி + அச்சி = உபாத்திச்சி

மடை + அச்சி = மடைச்சி

குலம்.

மருத்துவ + அச்சி = மருத்துவச்சி

தொழில்

தன்மை

நிறம்

நிலைமை

வெள்ளை + அச்சி = வெள்ளைச்சி

முண்டை + அச்சி = முண்டைச்சி ஆண்டி + அச்சி = ஆண்டிச்சி பேய் + அச்சி = பேய்ச்சி

நெட்டை + அச்சி = நெட்டைச்சி

குள்ள + அச்சி = குள்ளச்சி

அளவு

டம்

குப்ப + அச்சி = குப்பச்சி

சடை + அச்சி = சடைச்சி

சிற்றிடை + அச்சி = சிற்றிடைச்சி

உறுப்பு