உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

இலக்கணக் கட்டுரைகள் வெள்ளைச்சி, பேய்ச்சி, குப்பச்சி, சடைச்சி முதலிய பெண்பாற் பெயர்கள், நாட்டுப்புறங்களில் இயற்பெயராக இடப்பட்டு வருகின்றன.

அத்தி அச்சி என்னும் பெயர்கள் ஈறாக நின்று புணரும்போது, அவற்றின் அகரமுதல் கெட்டுவிடுகின்றது. கெடாது நிற்பதும் உண்டு. எ-டு : கள்ளவத்தி

வெள்ளைச்சி குப்பச்சி என்னும் பெயர்களை வெள்ளையம்மா குப்பம்மா என்பவற்றுடன் ஒப்புநோக்குக.

அத்தி என்னும் சொல்லின் குறையான 'தி' ஈறு, நிலைமொழியீற்று ளகர மெய்யோடு புணரும்போது, அவ் விரண்டும் 'ட்டி' எனத் திரியும். அது என்னும் சொல்லின் குறையான 'து'வ்வீறும், இங்ஙனமே 'டு'வ்வீறாகத் திரிதல். காண்க. (தாள் + து = தாட்டு.)

ஆளன் (ஆள் + அன்) என்னும் ஆண்பாலீற்றிற்கு எதிராக ஆட்டி (ஆள்+தி) என்பது பெண்பாலீறாய் வரும்.

எ-டு : வெள்ளாளன் வெள்ளாட்டி கண்ணாளன் கண்ணாட்டி

மணவாளன் மணவாட்டி திருவாளன் – திருவாட்டி

குணவாளன் குணவாட்டி குணாளன் குணாட்டி

வெள்ளாளன் என்பதை வெள்ளான் என்பது தவறு.

மகன் என்னும் ஆண்பாலீறு மான் என்று மருவுவது போல், மகள் என்னும் பெண்பாலீறு மாள் என்று மருவும்.

எ- டு :

பெருமகன் - பெருமான், குறுமகன் - குறுமான், மருமகன் மருமான், திருமகன் - திருமான், வெளிமகன் - வெளிமான். பெருமகள் பெருமாள், வேண்மகள் - வேண்மாள், திருமகள் திருமாள்.

'மாள்' என்னும் பெண்பாலீற்றொடு மேற்காட்டிய 'தி' என்னும் ஈறும் சேரும்போது, அவ் விரண்டுமே 'மாட்டி' எனத் திரியும்.

எ-டு : ஆண்பால்

பெருமான் திருமான்

சீமான்

பெண்பால்

பெருமாட்டி

திருமாட்டி

சீமாட்டி

பெருமான் என்பது பிரான் என்று மருவும்போது, பெருமாட்டி என்பது பிராட்டி என மருவும். பெருமாள் திருமாள் என்னும் ஒற்றையீற்றுப் பெண்பாற் பெயர்கள் இன்று வழக்கிறந்தன. விகுதிமேல் விகுதி வந்து