உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படர்க்கை 'இ' விகுதி

49

இரட்டைப்பன்மைப் பெயர்கள் வழங்குவது போன்றே, ஈற்றின்மேல் ஈறு வந்து இரட்டைப்பெண்மைப் பெயர்களும் வழங்கும்.

எ-டு : வெள்ளாட்டி + அச்சி = வெள்ளாட்டிச்சி.

பெண்டாட்டி (பெண்டு+ஆட்டி) என்பதிலுள்ள ‘ஆட்டி’ ஈறு மனைவிப் பொருள் குறிக்க வந்ததாகும். 'பெண்', 'பெண்டு' என்பன இடம்நோக்கி மனைவிப் பொருளுணர்த்தும் பெண்பாற் பொதுப்பெயராம்.

கை + பெண் = கைம்பெண்

+

கை + பெண்டு பெண்டு = கைம்பெண்டு

கை +

பெண்டாட்டி = கைம்பெண்டாட்டி.

பெண்பெண்டாட்டி என்பது, ஆண்பிள்ளைப் பிள்ளை காரான்பசு அரைஞாண் கயிறு என்பன போன்ற மிகைபடு சொற்றொடர்.

'ஒரு பெண்பெண்டாட்டி ஆணுடை யுடுத்து"

(ஈடு. 6 : 2)

கைம்பெண்டாட்டி பெண்பெண்டாட்டி என்பன, முறையே, கம்ம னாட்டி பொம்மனாட்டி எனக் கொச்சை வழக்கில் மருவி வழங்குகின்றன. அத்தி அச்சி என்னும் ஈறுகள் பெண்பால் மட்டும் உணர்த்தி உயர்வு குறிக்காமையால், தட்டாத்தியம்மா, உபாத்திச்சியம்மா முதலிய பெயர்கள் உயர்வு குறிக்க வந்த இரட்டைப் பெண்பாற் பெயராகும்.

அப்பன், ஐயன் என்னும் தந்தை முறைப் பெயர்கள், அருளப்பன், கண்ணப்பன், செல்லப்பன், நாகப்பன், அருளையன், கண்ணையன், செல்லையன், நாகையன் என எவ்வாறு ஆண்பாற் பெயரீறுகளாய் ஆளப்பெறுகின்றனவோ; அவ்வாறே, அம்மை, அத்தி, அச்சி என்னும் தாய்முறைப் பெயர்களும் பெண்பாற் பெயரீறுகளாய் ஆளப்பெறும் என்க.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் பெண்பால் குறித்து வரும் 'த்தி', 'ச்சி', 'டி' ('ட்டி') என்னும் ஈறுகளெல்லாம், அத்தி அச்சி என்னும் தென் சொற்களின் குறையும் திரிபுமேயன்றி, 'ஸ்திரி' என்னும் வடசொற் சிதைவல்ல என்று தெற்றெனக் கண்டுகொள்க.

G

"செந்தமிழ்ச் செல்வி" ஆகத்து 1951