உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

இலக்கணக் கட்டுரைகள் எனக் குற்றியலுகரம் மொழிமுதல் வருமென்றும் கூறினார். நுந்தை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின்படி) உள்ள குற்றியலுகரம் மெய்யீறாயின், அச் சொல் ந்ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்ஙன மெழுதப்படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண்டிருப்பா ராயின், அது,

"பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்”

“உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா

என்று அவர் கூறியவற்றோடு முரணுதலும் நோக்குக.

(தொல். 59)

(தொல். 60)

மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற்றுகர மாகவும் ஒலிக்கப்படும். அங்ஙனம் ஒலிக்கப்படுபவற்றுள் சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு. சிலவற்றிற்கில்லை.

"முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ

தப்பெயர் மருங்கின் நிலையிய லான

என்னும் நூற்பாவையும், அதன் உரையில்,

66

99

(தொல். 68)

'காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகர முமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாயென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின் றென்று கொள்க என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால், குற்றிய லுகரம் மெய்யீறாயின் முற்றியலுகரமும் மெய்யீற்றாய் உகரம் என்னும் உயிரே தமிழுக்கில்லை யென்று பெறப்படுதலும் அங்ஙனமின்மையும் அறிக.

செய்யுளியலில், இருவகை யுகரமு மொன்றாகக் கொண்டே, இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபு மாகு மென்ப

என்றார் தொல்காப்பியர்.

(தொல். செய். 4)

இதன் உரையில், “இருவகை யுகரமென்பன, குற்றுகர முற்றுகரங்கள், அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒருசொல் விழுக்காடு பட இயைந்துவரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரைபசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடொன்றி வந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் என்றவாறு...'

66

"முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசைகூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப்