உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (1)

61

பகுதியவாய்ச் சென்றதேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசை யாகா தென்பது “குறிலிணை யுகர மல்வழி யான” (தொல். செய்.4) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உதாரணம் : வண்டு, நாகு, காம்பு, வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு; இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு” என்று உரைத்தார் பேராசிரியர். இதனால், குற்றுகரமும் முற்றுகரம் போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பாமென்றும் அறியப்படும்.

சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பல வகையாகத் திரிந்து, முன்பு முற்றுகர வீறாயிருந்தவை அல்லது உகரமல்லாத ஈறாயிருந்தவை பின்பு குற்றுகர வீறாகின்றன. அவ் வகைகளாவன :

1. தொழிற்பெயர் :- முதனிலை திரிந்த தொழில் பெயர் :

எ-டு : படு பாடு, சுடு-சூடு.

விகுதிபெற்ற தொழிற் பெயர் :

எ-டு : படி+பு = படிப்பு, முடி + சு = முடிச்சு.

2. வேற்றுமைப் பெயர் :

சு

எ-டு : யான்+கு = எனக்கு, அவர் +கு கு = அவர்க்கு

3. குறிப்பு வினைமுற்று :

தாட்டு, கண் + து அன் + து = அற்று.

எ-டு : தாள்

+ து

=

4. பிறவினை :

||

கட்டு, பால் + து பாற்று,

=

6

எ-டு : படு + து = படுத்து, நட + து = நடத்து, வாழ்+து = வாழ்த்து, பாய் + சு = பாய்ச்சு.

5. போலி :

எ-டு : அடைவு அடவு அடகு.

6. சொல் திரிபு :

எ-டு : திரும் – திரும்பு, பொருந் பொருந்து, உரிஞ் - உரிஞ்சு,

உடன் (உடல்)

உடம் - உடம்பு, பண் பாண் பாடு, குள்-கொள்-கோள்-கோண்-கோடு, ஒளி-ஒளிர்-ஒளிறு,

போ-போது.

மேற்காட்டிய பாடு, படிப்பு, எனக்கு, தாட்டு, படுத்து முதலிய சொற்கள், குற்றுகர வீற்றை மெய்யீறாகக் கொள்ளின் பாட் படிப்ப் எனக்க் தாட்ட் படுத்த் என்ற முதல் வடிவங்களினின்று தோன்றினவாக வன்றோ கொள்ளல் வேண்டும்! இஃது எத்துணைப் பேதமையாகும்! மேலும், ஆட்டு பாட்டு கலக்கு விலக்கு முதலிய பிறவினைகளும் தொழிற்பெயர்களும் முதனிலை யீற்று வலியிரட்டியும் முதனிலை யிடைமெலி வலித்தும் முறையே ஆடு

2