உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

இலக்கணக் கட்டுரைகள்

பாடு கலங்கு விளங்கு என்னுஞ் சொற்களினின்று திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட் பாட்ட் கலக்க் விளக்க் என்னும் வடிவங் களினின்று பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ்சிறாரும் எள்ளிநகையாடத் தக்க தொன்றன்றோ? ஒருசில ஒலியடிச் சொற்களொழிந்த எல்லாச் சொற்களும் ஓரசையான வேர்ச்சொற் களினின்றே பிறந்தவை யாதலின், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட்டுணையும் தாமறியாதிருத்தலை முற்றுறக் காட்டுபவரேயாவர்.

குற்றுகரவீறு மெய்யீறாயின், அறுவகைக் குற்றியலுகரத் தொடர் களும் வல்லின மெய்யீற்றினவாதல் வேண்டும்.

66

ஞணநம னயரல வழள என்னும்

அப்பதி னொன்றே புள்ளி யிறுதி”

(தொல். 78)

என்று தொல்காப்பியர் பிரிநிலை யேகாரங் கொடுத்துக் கூறினமையானும், குற்றுகரவீறு தமிழ்ச்சொல்லில் ஓரிடத்தும் மெய்யீறாக எழுதப்படாமை யானும், அஃதுண்மையன்மை வெள்ளிடைமலை.

=

கண் + யாது = கண்ணியாது என்பது போன்றே சுக்கு + யாது சுக்கியாது என்று குற்றுகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்ளலாமே யெனின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் அங்ஙனம் புணர்வதால் அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு உகரவுயிரே தமிழுக்கில்லையென்றாகும் என்று கூறி விடுக்க. தொல்காப்பியர் மொழி

மரபியலில்,

"உச்ச காரம் இருமொழிக் குரித்தே” “உப்ப காரம் ஒன்றென மொழிப

99

(தொல்.75)

(தொல். 76)

என்று வரையறுத்தது உசு முசு தபு என்னும் மூன்று முற்றுகர வீற்றுச் சொற்களையே யன்றிக் குற்றுகரவீற்றுச் சொற்களை யன்று. சு, பு என்னும் இரு ரு முற்றுகர ஈறுகளைக் கொண்ட சொற்கள் எத்தனை என்று வரையறுப் பதே மேற்கூறிய நூற்பாக்களின் நோக்கம். கு, டு, து, று என்னும் நான்கு முற்றுகரவீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றுகர வீற்றுச் சொற்களும் அளவிறந்தன வாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இகு கு செகு தகு தொகு நகு நெகு பகு புகு மிகு வகு விகு எனக் குகரவீறும், அடு இடு உடு எடு ஒடு கடு கெடு கொடு சுடு தடு தொடு நடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என டுகரவீறும் கொண்ட முற்றுகரவீற்றுச் சொற்கள் பெருந்தொகையினவாயும் எண் வரம்பு படாதனவாயு மிருத்தல் காண்க. பிற முற்றுகரவீற்றுச் சொற்களும் இங்ஙனமே. குற்றுகரவீற்றுச் சொற்களோ வெனின், அகராதிகளாலும் வரையறுக்கப்படாத பல்லாயிரக் கணக்கின.

மேற்கூறிய நூற்பாக்களின் உரையில்,

66

'உகாரத்தோடு கூடிய சகாரம் இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு