உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

66

உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே”

என அதையடுத்தே கூறினார் தொல்காப்பியர்.

69

(எழுத்து. 106)

குற்றிய லுகரமெல்லாம் திரிபெழுத்தே. அதனாலேயே அதனைச் சார்பெழுத்தென்றார் தொல்காப்பியர். சார்பென்பது பற்றுக்கோடே. அது நிகழ்வது சொல்லிறுதியிலேயே. ஆதலால், இடமும் பற்றுக்கோடும் துணைக் கொண்டே குற்றியலுகரம் தோன்றும். அது தோன்றுமிடத்து முற்றியலுகரம் தோன்றாது. நெடுங்கணக்கில் உகரமே யன்றிக் குற்றியலுகரமில்லை. உகரஞ் சேர்ந்து கு,சு,டு,து,பு,று எனத் தனி யுயிர்மெய்கள் தோன்றுவது போல், குற்றியலுகரஞ் சேர்ந்து ஒரு தனி யுயிர்மெய்யுந் தோன்றாது. சொன் முதலிடையிலும், மெல்லின இடையின மெய்யூர்ந்தும் குற்றியலுகரம் தோன்றாது. ஆதலால், குற்றியலுகரம் இயல்பென்பது, நேர்நின்று காக்கை வெளிதென்பார் கூற்றே. அதற்குக் கட்கோளாறு அல்லது உட்கோளாறே கரணியமாகும்.

குற்றியலுகரத்தை நெடுங்கணக்கிற் சேர்த்துள்ள வடமொழியும், அதனை ரகர லகர மெய்களோடு சேர்த்தே ரு, லு என வழங்குகின்றது. குற்றியலுகரம் வடமொழியிலில்லை யென்று, பெரும்புலவர் வேங்கடராசுலு அவர்கள் தம் 'இலக்கணக் கட்டுரைகள்' என்னும் நூலிற் கூறியிருப்பது பொருந்தாது. வடமொழி பிற்காலத் திரிமொழியாதலின், சொல்லிடை நிகழும் அசையினைச் செயற்கை முறையிற் பிரித்தெடுத்து, தனி யெழுத்துகள் போற் காட்டிவருகின்றனர். அம், அ: என்பனவற்றிற்கும் ஈதொக்கும். ரூ என்னும் நெடிலைக் குற்றுகர நீட்டமெனக் கொள்ளாது, சாயுமுகர நீட்டமெனக் கொள்ளல் வேண்டும்.

குற்றுகரம் தனிமொழி யிறுதியிற் போன்றே புணர்மொழியிடையும், குற்றுகரமாகவே நிற்கும். அதாவது, அரையளபாய்க் குறுகியும் இதழ் குவியாதும் ஒலிக்கும். அது புணர்மொழியிடை முற்றுகரமாய் மாறிவிடு மென்பது, குறளன் இருவரிடை நிற்பின் அளவனாய்விடுவான் என்பது போன்றதே. குற்றியலுகர இயல்பிற்கு எவ்வகையிலும் நெறியீட்டு விலக்கேயில்லை. வருஞ்சொன் முதலில் எவ்வெழுத்து வரினும், அதன் குற்றியலுகரத் தன்மை மாறாது. வலிமுதற் சொல் வருஞ்சொல்லாய் வரினோ, குற்றியலுகரம் மேலும் குன்றிக் கால் அளபாய் ஒலித்து நிற்கும். இது புலவர் முதுகுன்றனார் கொள்கைக்கு நேர்மாறாம்.

4. குற்றியலுகரம் அரை மாத்திரை பெறுமென்பதும், ஒரு மாத்திரை உள்ள உகரமே இடமும் பற்றுக்கோடும் காரணமாக அரை மாத்திரையாகக் குறுகியொலிக்கும் என்பதும், அவ்வாறு அரை மாத்திரையாகக் குறுகி யொலிப்பினும் அஃது உயிரீறே என்பதும், வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் மெய்யைவிட்டு ஓடும் என்பதுமே நன்னூலார் கருத்துகளாகும்.