உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

இலக்கணக் கட்டுரைகள்

இங்குக் கூறப்பட்டுள்ள நன்னூலார் கருத்துகளுள் குற்றியலுகரம் உயிர்முதல் வருமொழி முன் மெய்விட்டோடும் என்னும் ஒன்றே தவறான தாகும்.

66

குற்றிய லுகரமும் அற்றென மொழிப”

என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில்,

(புணரியல்.3)

"இம் மாட்டேறு ஒருபுடைச்சேறல். புள்ளி பெறாமையின் அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற் றென்று கொள்ளற்க. 'நாகரிது' என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடிநின்றல்லது அப் பொரு ளுணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடிநிற்கு மென்றார்.” என்று நச்சினார்க்கினியர் கூறியது, அந் நூற்பாவிற்குப் பொருந்தாதேனும், குற்றியலுகரம் கெடாது நின்றே உயிரொடு புணரும் என்னும் உண்மையை உணர்த்துவது கவனிக்கத்தக்கது.

ஊணில்லை என்னும் புணர்மொழியில் நிலைமொழியீற்று ணகரமெய் எங்ஙனம் கெடாது நிற்கின்றதோ, அங்ஙனமே உறவில்லை, உலகில்லை என்பவற்றுள்ளும் முறையே முற்றுகரமும் குற்றுகரமும் கெடாதே நிற்கும். இதை ஒலித்துக் காணலாம். ஆயின், சற்று எஃகுச் செவிவேண்டும். உறவ், உலக் என்னும் சொல்லின்மையும், உறவு இல்லை, உலகு இல்லை என்னும் பொருளுண்மையும் அத் தொடரிடை உகரங் கெடாமைக்குச் சான்றாம். 'குற்றிய லுகரமும் அற்றென மொழிப

66

99

என்னும் நூற்பாவிற்குக் குற்றியலுகரமும் மெய்யெழுத்துப்போற் புள்ளியிட்டெழுதப்படும் என்பதே போந்தவுரையாம். நச்சினார்க்கினியரது, வேண்டாது கூறலும் வேறொன்று கூறலுமாகும். 'புள்ளியோடு நிலையல்' என்பதற்கு உயிரேற இடங்கொடுத்தல் என்று அவர் பொருள் கொண்டதே அதற்குக் கரணியமாகும்.

குற்றியலுகரத்தின் சாயுந்தன்மையும் குறுக்கமுமே ஏனையுயிரேற இடந்தருமென வுணர்க.

5. 'தனிமொழி' இறுதியில் அரை மாத்திரை பெறும் குற்றுகரம், தொடர் மொழி இடைப்படினும் அரை மாத்திரையே பெறும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால்,

"அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லா இறுதியும் உகரம் நிலையும்"

(தொல். குற்று.8) என்பது தொல்காப்பியம். “அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே முற்றுகரமாகி நிற்கும்" என்று இளம்பூரணர் இந் நூற்பாவிற்கு உரை யெழுதியுள்ளார். பேராசிரியரும் செய்யுளியல் 43ஆம் நூற்பாவுரையில்