உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

71

இளம்பூரணர் கருத்தையே சார்ந்துரைத்துள்ளார். மேற்கூறிய நூற்பாவில் ‘உகரம் நிறையும்' என்பதற்கு வேறாக “உகரம் நிலையும்” என்று பாடங் கொண்டு வேறுபட்ட பொருள் கூறினும், இதற்கு அடுத்த நூற்பாவுரையில் (குற்றியலுகரப் புணரியல், 4) இளம்பூரணர் கொண்ட ‘நிறையும்' என்ற பாடத்தையும், அவர் எழுதிய உரையினையும் எடுத்துக்காட்டி மறுக்காது போனமையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. செவி கருவியாக உணர்ந்து பார்க்கும்பொழுது, நாகு என்பதன் இறுதியில் வரும் குற்றுகர வோசை நாகுகடிது என்பதனுள் வாராது. ஓசை மிக்கு ஒலிப்பது வெள்ளிடை மலையென விளங்கவும், நன்னூலார் முன்னூலாசிரியராகிய தொல்காப்பியரோடும், உரைகாரர்களோடும் தக்க காரணமின்றி மாறுபட் டுரைப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.

சில செய்யுள்கட்கும் நூற்பாக்கட்குமுள்ள பாடவேறுபாடுகளுட் சிறந்ததைக் கண்டுபிடிப்பதே ஒரு சிறந்த புலமைத் திறனாகின்றது. பாட வேறுபாட்டினால் ஏற்படும் பொருள் வேறுபாடு ஆசிரியர் கருத்துக்கு நேர்மாறாகவும் நேர்ந்துவிடுகின்றது.

மன்னார்குடி நகராட்சிக் குடிதண்ணீர்க் குழாயொன்றின் மீது, குடிதண்ணீர்க்கு மட்டும்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டிய தொடர், எழுதினான் தவற்றால் ககரவொற்று விடப்பட்டு, தகையாற்ற வந்தாரெல்லாம் தவறாகப் பொருள்கொண்டு தண்ணீர் குடியாதுபோக நேர்ந்தது.

66

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிறையும்’

99

என்னும் நூற்பா ஈற்றிலுள்ள “நிறையும்” என்னும் பாடத்தினும், “நிலையும்” என்னும் பாடமே சிறந்ததாகத் தெரிகின்றது. குற்றியலுகரம் மெய்யெழுத்துப் போல் அரையள பொலிக்குமென்றும் புள்ளி பெறுமென்றும் முன்னர்க் கூறப்பட்டதினால், புணர்ச்சியில் ஒரேவிடத்து மெய் கெடுதல் அல்லது திரிதல்போல் குற்றியலுகரமும் மெய்கெடுதலும் திரிதலுமுண்டோ வென்னும் ஐயம் நீக்குதற்கே எல்லா இறுதியும் உகரம் நிலையும்” எனக் கூற வேண்டியதாயிற்று.

இளம்பூரணர் இன்று எழுதப்பெற்றுள்ள தொல்காப்பிய வுரை யாசிரியருள் முதல்வர். எத்துறையிலும் முதன்முதல் எழுதப்பெற்றது குறைபாடுள்ளதாகவே யிருக்கும். இளம்பூரணர் புலமை அவர் பெயருக் கேற்ப இளநிறைவு பெற்றதே யென்பது “கொடிநிலை கந்தழி வள்ளி" என்ற புறத்திணை நூற்பாவிற்கும் (33) "பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப என்னும் களவியல் நூற்பாவிற்கும் (13), அவர் கூறிய வுரையான் அறியப் படும். இளமையிலேயே நிறைவு பெற்றவர் என்பது அவர்க்கு ஏற்காது.

பேராசிரியரும் “உகரம் நிறையும்" என்று பாடங்கொள்ளத் தேவை யில்லை. சிறுவர் சிலவகையிற் கணக்கிற் சேர்க்கப் பெற்றும் சிலவகையிற்