உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

75

போலும், மருளும் என்னும் சொற்கள் போன்ம் மருண்ம் எனச் சிதைந்த நிலையிலேயே, அவற்றின் ஈற்று மகரமெய் குறுகியொலிக்கின்றது. வரும்வண்ணக்கன் என்னும் தொடரையும் பிரித்து, வரும் என்னும் நிலைமொழியை முந்திய அடியிறுதியிலும் வண்ணக்கன் என்னும் சொல்லைப் பிந்திய அடிமுதலிலும் நிறுத்திவிடின் மகரக்குறுக்கத்திற்கு டமில்லை. இங்ஙனமே ஐகாரம் வரும் சொல்லையும் அசை பிரித்து வெவ்வேறு சீரிலும் அடியிலும் நிறுத்திவிடின், ஓரளபாகக் குறுகாது. குற்றியலுகர குற்றியலிகரங்களையோ இங்ஙனம் பிரித்து நிறுத்த முடியாது. ஆகவே, இகர வுகரம் முந்தித் தோன்றியவை என்பது மட்டுமன்றி, குற்றியலிகர குற்றியலுகரங்கள் ஒழுங்குபட்டவையாயு மிருக்கின்றன.

மேலும், குற்றியலுகர குற்றியலிகரங்கள் முந்தி அறியப்பட்டதினால் அப் பெயர் பெற்றனவென்றும், பிந்தி யறியப்பட்டவை யெல்லாம் குறுக்கமென வேறு வகையிற் பெயர் பெற்றன என்றும் கொள்வதில் யாதொரு இழுக்குமில்லை யென்றும், பெயர் வேறுபாட்டைக் குற்றியலுகரம் திரிபெழுத்தன்றெனக் கூறுவதற்குச் சான்றாகக் கொள்வது பொருந்தா தென்றும், கூறி விடுக்க.

7. (வேறு விளக்கம்) "இடமும் பற்றுக்கோடும் காரணமாகவே ஒரு மாத்திரை அளவுள்ள முற்றுகரம் குறுகி விகாரப்பட்டு அரை மாத்திரையாயிற்று என்று சாதிப்பாரும் பலருளர். அவர் கூறும் காரணம் உண்மையாயின், இரண்டு மாத்திரையளவுள்ள ஐகாரமும் ஔகாரமும், மொழியகத்து வேறு எழுத்துகளின் சார்பால் ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் குறுகி ஒலிக்கும்போது ஐகாரக் குறுக்கம் எனவும் ஔகாரக் குறுக்கம் எனவும், அரை அளவுள்ள மகரம் மொழியகத்து வேறு எழுத்துகளின் சார்பால் கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்போது மகரக் குறுக்கம் எனவும் பெயர் தந்த தொல்லாசிரியர் இச் சார்பெழுத்துக்கும் உகரக் குறுக்கம் என்றன்றோ பெயர் தந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் பெயர் கூறக் காணோமே!”

ஐகார ஔகாரங்கள் முதன்முதலாகத் தமிழ் நெடுங்கணக்குத் தோன்றியபோதே பிறவுயிர்களோடு தோன்றிய தனியுயிர்களல்ல; சற்றுப் பிந்தியமைந்த புணரொலிகள் (Diphthongs).

66

66

66

அகர இகரம் ஐகார மாகும்’

அகர உகரம் ஔகார மாகும்

'அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

66

ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

'அகரத் திம்பர் வகரப் புள்ளியும்

ஔஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”

என்னும் நூற்பாக்களே இதை வலியுறுத்தும்.

(54)

(55)

(56)