உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

CC

66

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்...தோன்றும்

"அகரத் திம்பர் வகரப் புள்ளியும்...தோன்றும்’

இலக்கணக் கட்டுரைகள்

என்னும் நூற்பாக்கட்கிசையச் சில சொற்களும் தோன்றியுள்ளன.

வள் = கூர்மை, வள் (வய்) வை = கூர்மை.

அள் = செறிவு, வன்மை, பெருமை (மிகுதி).

அள்- (அய்- ஐ = பெருமை, பெரியோன், தலைவன்), தந்தை, ஆசிரியன், அரசன்.

பொள்-பொய்-(பய்) பை = துளையுள்ளது, குழிவானது, உள்ளீடற்றது. (பள்-(பய்)-பயம்பு = பள்ளம், குழி

அம்மை – அவ்வை=தாய், பாட்டி, ஒ.நோ: செம்மை - செவ்வை. அவ்வை ஒளவை.

வாவல்=சிறகால் வாவிச் செல்வது. வாவுதல்=தாவுதல்.

வாவல் வவ்வால் வௌவால். பெரு வெளவால் வாவிப் பறப்பதையே எங்கும் காண்க.

முதற் காலத்தில் தோன்றிய தனியொலி நெடில்கட்குக் காரச்சாரியை கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் தோன்றிய புணரொலி நெடில்கட்கோ அதனின்றும் வேறான ‘கான்' சாரியை கொடுக்கப்பெற்றது. புணரொலி நெடில்களையும் ஐகாரம் ஔகாரம் எனக் கூறுவது, வடமொழி வழக்கைப் பின்பற்றிக் குறில்களையும், அகாரம் இகாரம் எனக் காரச்சாரியை கொடுத்துக் கூறும் ஒருசார் தவற்று வழக்காகும்.

முந்தித் தோன்றிய தனியொலி நெடில்கட்கும், பிந்தித் தோன்றிய புணரொலி நெடில்கட்கும் வெவ்வேறு சொல்லாற் சாரியை யமைந்தது போன்றே, முன்னூலாசிரியர் கண்ட சார்பெழுத்துகட்கும் பின்னூலாசிரியர் கூறிய எழுத்துக் குறுக்கங்கட்கும் வெவ்வேறு சொல்லாற் பெயரமைந்தன என அறிக.

மேலும், குற்றியலுகரம் போல் ஐகார ஔகாரக் குறுக்கங்கள் புணர்ச்சி வேற்றுமைப் படாமையின், சார்பெழுத்துத் தன்மையைப் பெற்றனவாகா. ஆய்தம் என்பது மெல்லிய ககரமான ஒரு நுண்ணொலி. ஆய்தம் = நுணுக்கம்.

"ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்”

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.

=

(உரி. 32)

சார்பெழுத்துகளென்று தொல்காப்பியங் கூறும் மூன்றனுள், இரண்டு உயிரெழுத்துகளும் ஒன்று மெய்யெழுத்துமாகும். உயிரெழுத்துகள் அளபிற் குன்றியது மட்டுமன்றி, ஒலியிலும் வேறுபட்டவை. மெய்யெழுத்தான