உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

இலக்கணக் கட்டுரைகள்

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே '

(மொழிமரபு. 12)

என்று தாம் வகுத்துக்கொண்டவாறே, தொல்காப்பியர் குற்றியலுகரச் சொற்களை ஈரெழுத் தொருமொழி, தொடர்மொழி என இரண்டாகப் பகுத்து, "நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே”

என்று தொகுத்தும், பின்னர்க் குற்றியலுகரப் புணரியலில்,

66

“ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்

என்று அவ்விரு தொடரையும் ஆறாக விரித்தும், கூறியுள்ளார்.

(1)

“உகரங் குறுகிடன்” என்னும் தொல்காப்பியத் தொடரை “வன்மை யூர் உகரம் அஃகும்” என்னும் நன்னூற்றொடரும்; “நெட்டெழுத் திம்பர்” என்னும் தொல்காப்பியத் தொடரை “நெடிற்றொடர்” என்னும் நன்னூற் றொடரும்; முற்றும் ஒத்திருத்தல் காண்க. ஆகவே,

“நெடிலோ டாய்தம் உயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்

அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே

99

(15601. 13)

என்று நன்னூலார் கூறியுள்ளது முற்றும் உண்மைக்கு ஒத்ததும் தொல் காப்பியத்தொடு இம்மியும் முரண்படாததுமாகும். ஓர் இலக்கணத்தைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறலே நூன்முறை யாதலின், தொல் காப்பியர் தம் நூலின் 1ஆம், 36ஆம், 466ஆம் நூற்பாக்களில், முறையே, குற்றியலுகர வியல்பைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறினார் எனவறிக.

9. "மேலும், இடமும் பற்றுக்கோடும் காரணமாக முற்றுகரம் குறுகி ஒலிப்பதாயின், காரணம் உள்வழியெல்லாம் காரியம் நிகழவேண்டுவது ஒருதலையாகலின் ஏது, தாது என்ற வடமொழிச் சொற்களில் உள்ள உகரமும் ஏற்ற இடமும் பற்றுக்கோடும் உடைமையின், குற்றியலுகரம் எனல் வேண்டும். ஆனால், அவ் வுகரம் முற்றுகரமாகவன்றோ உள்ளது. எனவே, இடமும் பற்றுக்கோடும் குற்றியலுகரம் வருவதற்குச் சார்பே தவிர, உகரம் குறுக்கம் பெறக் காரணங்கள் ஆகா.

டமும் பற்றுக்கோடும் கரணியமாக முற்றுகரம் குறுகி யொலிக்கு மென்று இலக்கணியர் கூறியது, தமிழ்ச்சொற்களையே யன்றிப் பிறமொழிச் சொற்களை நோக்கியன்று.