உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

இலக்கணக் கட்டுரைகள்

சொன்னார்?' முதலிய தொடர்ச்சொற்களிலும், முதலசையிலேயே அல்லது முதலெழுத்திலேயே முதன்மையாக ஒலியழுந்துவதைக் காண்க. ஒலியழுத்தம் மூவகைப்படும் என மேற்கூறப்பட்டிருப்பினும், சிறுப்பாக, அது எடுத்தல் வகையையே உணர்த்தும். அண்ணாமலையரசர் என்னுஞ் சொல்லில் முதலசையில் அழுத்தம் எனின், முதலசையில் எடுப்பொலி என்பது பொருளாகக் கொள்க. பொருள் விளங்குமிடமெல்லாம், ஒலி யழுத்தம் என்னுங் குறியீட்டை அழுத்தம் எனச் சுருக்கியும் வழங்கலாம்.

தமிழில் ஒலியழுத்தம் இயல்பாக முதலெழுத்தைத் தாக்குவதனா லேயே கசதபக்கள் சொன்முதலில் ஏனையிடத்தினுஞ் சற்று வலிதாக ஒலிக் கின்றன வென அறிக.

வன்புறை

வன்புறை என்பது பொருள்பற்றி அழுத்தி அல்லது வற்புறுத்திச் சொல்லும் முறை அது மகன் வரவே வருவான் எனத் தனி அசையை யேனும் அவன் என்ன செய்தான்? அவன் என்ன செய்தான்? அவன் என்ன செய்தான்? என முழுச்சொல்லையுமேனும், 'மாணவர் எல்லாரும் நாளைக் கூட்டத்திற்கு வரவேண்டும்' என முழுச் சொற்றொடரையு மேனும் தழுவும். மகனா, மகளா என எழும் ஐய வினாவிற்கு விடையாக மகன் என ஆண்பால் உணர்த்தும் ‘அன்’னீற்றை அழுத்திக் கூறுங்கால், னகர வொற்றே அழுத்தத்திற்குரியதேனும், ஒலியழுத்தம் தனி மெய்யின்மேல் விழுதல் கூடாமையின், மகன் எனக் குறிக்கப்பெறாது மகன் எனக் குறிக்கப்பெற்றதென்க. ஒலியழுத்தத்திற்கும் (Accent) வன்புறைக்கும் (Emphasis) வேறுபாடுள்ளதேனும், ஒருபுடை யொப்புமைபற்றி, தனியசை வன்புறையை மட்டும் ஒலியழுத்தத்தின் பாற்படுத்திக்கொள்ளலாம். பொருள் வேறுபாடு

..

'உப்ப காரம் ஒன்றென மொழிப

இருவயின் நிலையும் பொருட்டா கும்மே”

(76)

என்பது தொல்காப்பியம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை வருமாறு : இஃது ஒரு சொல் வரையறையும் அஃது ஓசை வேற்றுமையால் இருபொருள் தருமெனவுங் கூறுகின்றது.

66

'உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர். அதுதான் தன்வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் என்றவாறு.

(எடுத்துக்காட்டு) : “தபு என வரும். இது படுத்துக்கூற, 'நீ சா'வெனத் தன்வினையாம். எடுத்துக் கூற நீ ஒன்றனைச் சாவப்பண்'ணெனப் பிறவினையாம். உப்பு சப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு