உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

இலக்கணக் கட்டுரைகள் ஈற்றிலுள்ளது முற்றியலுகரம்; அச் சொற்பொருள் பொதுவகையான அளவு என்பது, அளபு என்பதன் ஈற்றிலுள்ளது குற்றியலுகரம்; அச் சொற் பொருள் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்பது. இடு, சுடு, பகு, விடு, உறு, பெறு முதலிய முற்றுகர வீற்று வினைப்பகுதிகள், முதல் நீண்டு, முறையே ஈடு, சூடு, பாகு, வீடு, ஊறு, பேறு எனக் குற்றுகர வீறாங்கால் தொழிற் பெயரும் தொழிலாகு பெயருமாவதும், முற்றுகர குற்றுகரப் பொருள் வேறுபாடு குறிப்பதே. மறு, மாறு; நடு, நட்டு முதலிய சொல்லிணைகளும், இயற் சொல்லும் திரிசொல்லுமாய் நின்று உகர வேறுபாடுபற்றிப் பொருள் வேறுபாடு குறிப்பனவே. இனி, இதற்கு மாறாக, அது, ஆது; ஒடு, ஓடு முதலிய வேற்றுமையுருபுகளும், இது, ஈது; கொசு, கொசுகு; நாவு, நாக்கு முதலிய தனித்து வருசொற்களும், முற்றுகர குற்றுகர வேறுபாடுபற்றிப் பொருள் வேறுபடாததனை அறிக. வீடு என்னும் வினைச்சொல் விடு எனப் பொருள் படுவதுங் காண்க.

சார்பெழுத்துகளின் தொகை கூறும் தொல்காப்பிய நூற்பாவுரையில்; 'இகர உகரங் குறுகி நின்றன, விகார வகையாற் புணர்ச்சி வேறுபடுதலின்.. இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்" என நச்சினார்க்கினியர் கூறியதில் 'பொருள் வேற்றுமை' என்பது இத்தகையதே யெனத் தெற்றெனத் தெரிந்து கொள்க. சொற்பிரிப்பு

சில சொற்கள் புணர்ந்து நிற்கும் நிலையில், இரட்டுறலும் கவர்படு பொருளுங் கொண்டு பல்வேறு சொற்களாகப் பகுத்தற் கிடந்தரும். சொல் வேறுபாட்டிற்கேற்ப அழுத்தநிலை மாறும். புணர்ந்து நிற்கும் சொற்கள் இன்னவென அறிதற்குப் புணர்ச்சியிடத்து ஒரு குறிப்புமில்லை. இடம் நோக்கியும் சொல்வான் குறிப்பறிந்துமே இன்ன சொற்கள் எனத் துணிதல் வேண்டும்.

இவற்றை,

66

66

‘எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே’

அவைதாம்

முன்னப் பொருள புணர்ச்சி வாயின்

99

(தொல். 141)

இன்ன வென்னும் எழுத்துக்கடன் இலவே”

என எடுத்தோதினார் தொல்காப்பியர்.

இவற்றிற்கு நச்சினார்க்கினியருரை வருமாறு :

தொல். 142)

"எழுத்து ஒரு தன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர்

மொழிகள், எடுத்தல், படுத்தல், நலிதல் என்கின்ற ஓசை வேற்றுமையாற் பொருள் வேறுபடுதல் நிலைபெற்ற குணம் என்றவாறு.