உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒலியழுத்தம்

85

"செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன் போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா என இவை இசையிற் றிரிந்தன. "பல பொருட்குப் பொதுவென்ற புணர்மொழிகள்தாம், குறிப்பான் உணரும் பொருண்மையினையுடைய, புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல என்றவாறு.

“செம்பொன் பதின்றொடி என்றுழிப் பொன்னாராய்ச்சி யுளவழிப் பொன்னெனவும், செம்பாராய்ச்சியுளவழிச் செம்பெனவும், குறிப்பான் உணரப்பட்டது. இசையிற் றிரிதலென்றது ஒலியெழுத்திற்கெனவும், எழுத்துக் கடனில வென்றது வரிவடிவிற்கெனவும், கொள்க.’

செம்பொன்பதின்றொடி முதலிய எடுத்துக்காட்டுப் புணர்மொழி களை அல்லது தொடர்மொழிகளைப் பின்வருமாறு பல்வேறு வகையிற் பகுக்கலாம். செம்பொன்பதின்றொடி 1. செம்பு - ஒன்பதின்றொடி

செம்பருத்தி

2. செம்பொன் – பதின்றொடி (தொடி

1. செம் - பருத்தி

பலம்)

2. செம்பு – அருத்தி. (அருத்தி = விருப்பம்)

குறும்பரம்பு

1. குறு - பரம்பு

2. குறும்பர் - அம்பு

நாகன்றேவன்போத்து

1. நாகன் - தேவன் - போத்து

2. நாகன்றே -வன்போத்து

3. நாகன் - தே - அன்போத்து

4. நாகு – அன்று - ஏவு - அன்பு - ஓத்து.

(போத்து - ஆண்விலங்கு; ஓத்து ஓதப்பெறும் நூல்.

நாகு

பெண்விலங்கு).

தாமரைக்கணியார்

1. தாமரை

2. தாம் - அரைக்கு

க(ண்)ணியார்

அணியார்

3. தா-மரைக்கு-அ(ண்)ணியார்

(தா-தாவுகின்ற; மரை ஒரு வகை மான்)

குன்றேறாமா - 1. குன்றேறு - ஆமா

2. குன்றேறா - மா

ஆமா (ஆ

காட்டுப் பசு. மா-விலங்கு)