உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

பண்பாட்டுக் கட்டுரைகள்

முடிவேய்தலாலேயே வேந்தன் என்னும் பெயர் தோன்றிற்று. மே - மேல். மே - மேய். மேய்தல் = மேலிடுதல். மேலணிதல்.

வேய். வேய்தல் = மேலிடுதல், முடிசூடுதல்.

வேய்ந்தோன் - வேய்ந்தன் - வேந்தன் - வேந்து.

ஒ.நோ : காய் - காய்ந்து - காந்து.

மேய்

கொன்றைவேந்தன் = கொன்றைமாலை சூடிய அல்லது அணிந்த சிவன்.

ஊரன் ஓரூர்த் தலைவன்; வேள் சிலவூர்த் தலைவன்; மன்னன் அல்லது பெருவேள் பலவூர்த் தலைவன்; கோ (வேந்தன் குடும்பத்தைச் சேர்ந்த) இளவரசன் அல்லது துணையரையன்; வேந்தன் ஒரு தமிழ்நாட்டுத் தலைவன்; மாவேந்தன் முத்தமிழ்நாட்டு அல்லது தமிழகத் தலைவன். நாடுகிழவோன் என்பது, ஊர்த்தலைவனுக்கு மேற்பட்ட குறுநில மன்னரையும் பெருநில அரசரையுங் குறிக்கும்.

முதற்காலத்தில் ஓரூர்த்தலைவன் பெயர், குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை நிலத்திற்கும் வெவ்வேறாயிருந்தது. அக்காலத்தில் ஊரன் என்பது மருத நிலத்து ஊர்த்தலைவன் பெயர்.

பட்டங்கட்டுவது நெற்றிக் கழகு செய்வதால், நாளடைவிற் பெயர் பொறிக்காத பட்டம் பெண்டிர் நெற்றியணியாயிற்று.

தலைவர்க்குக் கட்டும் பட்டம் சிறப்புப்பெயர் தாங்கி நின்றதனால் பிற்காலத்தில் சிறப்புப் பெயரெல்லாம் பட்டம் எனப்பட்டன.

பட்டம் என்னும் சொற்பொருள்கள்

பட்டம் = 1. பட்டையான துண்டு. 2. சட்டங்களை இணைக்க உதவும் தகடு. “ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி" (நெடுநல். 80, உரை). 3. பட்டை வடிவு. 4. ஆட்சித் தலைமைக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. “பட்டமுங் குழையு மின்ன” (சீவக. 472). 5. பெண்டிர் நெற்றியணி. “பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்து” (திவ். பெரியாழ். 3:7:6), 6. மணிகளில் தீரும் பட்டை. 7. துணி (அக.நி), 8. பெருங்கொடி (பிங்.), 9. காற்றாடி, "பிள்ளைகள் பற்பல வுயர்பட்டம் விடல்போல்" (திருப்போ. சந். பிள்ளைத். சப்பாணி. 8). 10. உரோமானியக் குருமார் உச்சந்தலையில் வட்டமாக மழித்துக் கொள்ளும் இடம். 11. ஆட்சிப்பதவி (பிங்.), 12. ஆட்சி, 13. பதவிப்பெயர்; "பட்டமும் பசும்பொற் பூணும் பரந்து" (சீவக. 112), 14. சிறப்புப்பெயர் எ-டு: தென்னவன் பிரமராயன், உத்தம சோழப் பல்லவராயன். 15. கல்விப்பெயர், எ-டு : புலவன், முதுகலை, பண்டித மணி, பெரும் பேராசிரியர், 16.குலப்பெயர், எ-டு : பிள்ளை, முதலியார்.

கழகக் (சங்க) காலத்தில், இக்காலத்திற்போற் பிறவிக் குலப்பட்டப் பெயர் வழங்கவில்லை. கூலவாணிகன், அறுவை வாணிகன், மருத்துவன்,