உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குலப்பட்ட வரலாறு

91

வண்ணக்கன், கணியன், கிழார் என்பன போன்ற தொழில் வகுப்புப் பெயர்களே அடைமொழிகளாக வழங்கிவந்தன.

எ-டு : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

கிழார் என்பது உழவர் வகுப்புப் பெயராகத் தோன்றுகின்றது. ஆயின், அரிசில்கிழார், ஆலத்தூர்கிழார், ஆவூர்கிழார், இடைக்குன்றூர்கிழார், காரிகிழார், குறுங்கோழியூர்கிழார், குன்றூர்கிழார், கூடலூர்கிழார், கோவூர்கிழார், துறையூர் ஓடைகிழார், நொச்சி நியமங்கிழார், பெருங் குன்றூர்கிழார், மாங்குடிகிழார், வடமோதங்கிழார் எனப் பெரும்பாலும் இயற்பெயரின்றி ஊர்ப்பெய ரடுத்த தொழிற்பெயராகவே வழங்கி வந்திருக்கின்றன. பிற்காலத்துச் சேவூர்க்கிழார் -சேக்கிழார் என்பதும் அங்ஙனமே.

ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்னுங் கழகக் காலப் பெயர்களில், மூலம் என்பது நாளைக் குறிப்பதாகக் கருதினார் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர்.

கிழார் என்பது கிழவர் என்பதன் மரூஉ, கிழவர் என்பது கிழவன் என்பதன் உயர்வுப்பன்மை. கிழவன் = நிலத்திற்குரியவன், உழவன்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும்

(குறள். 1039)

என்னுங் குறளில், கிழவன் என்பது நிலக்கிழவனான உழவனைக் குறித்தல்

காண்க.

கிழான் என்னும் மரூஉ இன்று இந்தியில் கிசான் என்று திரிந்து வழங்கி வருகின்றது.

கதப்பிள்ளை அல்லது கந்தப்பிள்ளை என்பது, புறநானூற்றுப் பாடலாசிரியருள் ஒருவர் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அது இக்காலத்திற் போற் பிள்ளைப் பட்டத்தோடு கூடிய மாந்தன் பெயரன்று; முருகனைக் குறிக்கும் தெய்வப்பெயர் ஒரு புலவர்க்கு இடப்பட்டதே. 'விநாயகர்' என்னும் ஆனைமுகத் தெய்வ வணக்கம், கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பின்னரே தமிழகத்திற் புகுத்தப்பட்டது. அதற்கு முன், முருகனுக்கே சிவன் மகன் என்னும் கருத்தினால் பிள்ளை அல்லது பிள்ளையார் என்னும் பெயர் வழங்கிற்று. பிற்காலத்தில் வடநாட்டினின்று இறக்குமதியான ஆனை முகவன், காலத்தால் இளைய பிள்ளையாயினும் ஆரியச் சார்பினாற் சிறப்புப் பெற்று மூத்த பிள்ளையாக்கப்பட்டான்.

ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழர் வகுப்புகளெல்லாம் தொழில் வேறுபாட்டால் ஏற்பட்டனவும், விருப்பப்படி மாறக்கூடியனவும், கூட்டுறவிற்கு முட்டுக்கட்டை யாகாதனவுமா யிருந்தன. ஆரியர் வந்தபின், கழகக்காலத்தில், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருந் தமிழ் வகுப்புகள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரியப்