உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

புறநானூறும் மொழியும்

1. முன்னுரை

தமிழையும் அதன் இலக்கியத்தையும் செவ்வையாயறியவேண்டின், தமிழின் வரலாற்றறிவு இன்றியமையாது வேண்டப்படும். இம் முறை ஏனை மொழிகட்கும் ஏற்கும். பழைய ஆங்கில இலக்கண நூல்களிலெல்லாம் முன்னுரையாக ஆங்கிலச் சரித்திரம் கூறப்படுதலை நோக்குக. தமிழும் தமிழரும் தோன்றியது மாந்தன் முதன்முதல் தோன்றிய குமரிநாடே என்பதும், குமரிநாட்டார் வடக்கே செல்லச் செல்லத் தமிழ் முதலாவது திரவிடமாயும் பின்பு ஆரியமாயுந் திரிந்த தென்பதும், ஆரியர் தமிழகத் திற்கு வருமுன்பே தமிழர் பிற துறைகளிற் போன்று மொழியிலும் தலைசிறந்திருந்தன ரென்பதும், பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித் தமிழ் நடையினவே யென்பதுவும், பிறவும், மொழி நூலார் கண்ட உண்மைகளாம். தமிழ்நூல்களை யாராயாமலே குமரிநாட்டை ஊகித்தறிந்த மேலைக் கலைவல்லார் அதனை லெமுரியா (Lemuria) என்றும், காண்டு வானா (Gondwana) என்றும் அழைத்தனர். அவர்கள் தமிழ் நூல்களை மட்டும் அறிந்திருப்பின், இதுபோது, குமரிநாட்டைப்பற்றி ஐயத்திற்கோ மறுப்பிற்கோ எள்ளளவும் இடமிருந்திருக்காது.

2. தமிழின் காலப் பகுதி

தமிழின் காலம் கீழ்க்காணுமாறு முப்பெரும் பகுதியினதாகும் (1) முதற்காலம் கி.மு. சுமார் 10,000 3,000.

(2)

டைக்காலம் அல்லது கழகக்காலம் - கி.மு. சுமார் 3,000 - கி.பி. 200.

(3) தற்காலம் - கி.பி. 200 முதல்.

இவற்றுள் ஒவ்வொன்றும் பல சிறு பகுதிகளாகப் பாகுபட்டுள்ளது. கழகக் காலம் (1) தலைக் கழகக்காலம், (2) இடைக் கழகக்காலம், (3) கடைக் கழகக்காலம் என முப்பகுதிப்படும். இவற்றுக்கு இடையிடை இடையீடு மிருந்தது. இறையனா ரகப்பொருளுரைப்படி, முக்கழகமும் நிலைத்திருந்த காலம் முறையே நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டும் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டும் ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற்றி யாண்டுமாக மொத்தம் ஒன்பதினாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறி யாண்டாகும்.