உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

பண்பாட்டுக் கட்டுரைகள்

"

ஒலிபற்றிய சொல், பிள் என்னும் மூலத்தினின்றும் பிடுங்கு என்னும் பகுதியினின்றும் பிறந்தது. தென்னாட்டில் எல்லாக் கிணறுகளும் சுரங்க வேட்டாலேயே வெட்டப்படுகின்றன. சில கிணறுகள் மிகப் பழைமை யாயிருப்பதுபற்றி, இவ் வழக்கமும் பண்டுதொட்டே வந்திருத்தல் வேண்டும். கிணறு என்ற பெயர் மிகப் பழைய நூல்களிற் காணப்படா விடினும், அதற்கினமான கேணி என்னும் பெயர் காணப்படுகின்றது. கேணி, கிணறு என்னுமிரண்டும் கீள் என்னும் பகுதியினின்றும் பிறந்து திரிந்தவை. (கல்- கில்-கீள் = தோண்டு) கற்பாங்கான இடத்தில் வெட்டப்பட்டதே பண்டு கேணி யெனப்பட்டது. திருவிளையாடற் புராணத்திற் கேணி யென்னுஞ் சொல் நிகழ்கின்றது(வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்தது). மக்கள் பெருகாத முன் காலத்தில் யாற்றுவளமுள்ள மருதநிலங்களிலேயே உழவர் குடியிருந்தனர். மக்கள் பெருகவே யாறில்லா நிலத்தும் உழவர் உறைய வேண்டியதாயிற்று. அதனாலேயே கிணறுகள் வேண்டியவாயின.

துகாறுங் கூறியவற்றால், வெடிமருந்து தென்னாட்டிலேயே தோன்றியதென்றும், அது முதலாவது வாணமாகப் போருக்குப் பயன் படுத்தப்பட்டதென்றும், அதன் பின்னரே அது வேடிக்கைக் காயிற்றென்றும், கிணறுண்டான காலந்தொட்டுப் பாறை பெயர்க்கவும் உதவி வருகிற தென்றும் தெரிந்துகொள்க, துப்பாக்கியும் பீரங்கியும் பிற குண்டுகளுமே மேனாட்டாராற் பிற்காலத்துச் செய்யப்பட்டவை.

- “செந்தமிழ்ச் செல்வி" மீனம் 1932