உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வெடிமருந்து கிணறுவெட்டு

109

இனி, கிணறு வெட்டுக்குக் கருமருந்தைப் பயன்படுத்துவதும் தொன்றுதொட்டு வந்த வழக்காகும். சோணாடு காவிரிப்பேரியாற்றுப் பாய்ச்சலானபடியால் பாண்டி நாடுபோல் கிணற்றுநீரை வேளாண்மைக்கு வேண்டுவதன்று. சோணாடு முழுமையும் பொன்னிநாடு, புனனாடெனப் பட்டமையே அதைப் புலப்படுத்தும். குமரிநா டமிழ்ந்தபின் வைகையும் பொருநை (தாமிரபரணி)யுமே பாண்டிநாட்டியாறுக ளாதலானும், அவை காவிரிபோலப் பேரியாறுக ளன்மையானும், நெட்டிடையிட் டிருத்தலானும், பாண்டிநாட்டின் பெரும்பாகப் பயிர்த்தொழில் கிணற்றிறைவையாலேயே நடந்துவருகின்றது. ஆற்றுப் பாய்ச்சலில்லா விடங்களிற் குளங்களிருப் பினும். அவை மழையின்றி நிரம்பாமையானும், நிரம்பினும் விரைந்து வற்றுகின்றமையானும், அவ்வவ்வூர்ப் பாய்ச்சலுக்குப் போதாமையானும், கிணற்றுநீர் இன்றியமையாததா யிருக்கின்றது. சோணாட்டார் காவிரியாற் றையே பெரிதும் நம்பியிருத்தலின், பாண்டி நாட்டார்போல உழவுத் தொழிலை உழந்து செய்ய வேண்டியதில்லை. ஒரோவழி வேண்டிய திருப்பின் உழந்து செய்வதுமில்லை. பயிர்த்தொழிலுக்குப் பாண்டிநாட் டுழவர்க்குள் மட்டும் வழங்கிவரும் ‘பாடுபடுதல்’ என்னும் குறியீடே இதைப் புலப்படுத்தும்.

சோணாட்டார் காவிரிப் பாய்ச்சலின்றி நெல் விளைப்பதருமை. பாண்டி நாட்டாரோ குளம் வற்றியக்காலும் கிணற்று நீரால் நன்செய் விளைவும் புன்செய் விளைவும் விளைக்கின்றனர். நன்செய் விளைவிலும் புன்செய் விளைவு தென்னாட்டிற் சிறந்திருப்பதே அங்குள்ள நீர்க்குறைவையும் கிணற்றிறைவையையும் புலப்படுத்தும். இன்றைக்கும் தென்னாட்டுழவர்க்கு அவ்வக்கால உணவாயுள்ள சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய கூலவகைகள் வடநாட்டார்க்கு என்னவென்றே தெரியவில்லை. கிணறுகள் வடபாகங்களில் தென்னாட்டிற் போல ஏராளமாயும் அகன்றும், சமுக்கமாயுமிராமல், சிலவாயும் சிறியவாயும் வட்டமாயு மிருக்கின்றன. கிணறுகள் அகன்ற சதுரங்களாயிருப்பின் ஆழமாய்த் தோண்டவும், பக்கத்திற்கொரு கமலை போடவும் உதவும்.

தென்னாட்டின் பெரும்பாகம் ஆற்றோரமா யின்மையானும், அடிப்படை கற்பாங்கானமையானும், கிணறு வெட்டுவதற்கு ஆழமாகத் தோண்டவும் கற்பாறைகளைப் பெயர்க்கவும் வேண்டியிருக்கிறது. அது இருப்புப்பாரை கூந்தாலம் முதலிய கருவிகளாற் கூடாமையின் வெடிம் ருந்தின் உதவி வேண்டியதாயிருக்கிறது. கற்பாறையில் ஒரு சுரங்கம் தோண்டி அதற்குள் வெடிகுழாய்க்குட் செலுத்துவதுபோல் கருமருந்தையும் கரம்பையையுஞ் செலுத்தி நெருப்பை வைக்கிறார்கள். அது பேரொலியுடன் வெடித்துப் பெருவலியுடன் புடை சூழ்ந்த பாறைகளை யெல்லாம் படைபடையாகப் பெயர்த்துவிடுகின்றது. இதே முறையில்தான் திருவிழாச் சிறப்பிற்குப் போடும் பிடாங்கு வேட்டும் வெடிக்கின்றது. பிடாங்கு