உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

பண்பாட்டுக் கட்டுரைகள்

கடையதற்கு வார் பகுதி. கடகாலின் வளைந்த பிடிக்கு வாளியென்று பெயர். பின்னர் அது சினையாகுபெயராய் அல்லது தானியாகு பெயராய் அக் கடகாற்கே ஆகிவந்தது.

வாளொளி யாகும்’

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள்'

என்பன தொல்காப்பியம். வார் -வால் (போலி)

(தொல். சொல். 367)

(தொல். சொல். 317)

இவற்றுட் பின்னிரண்டும் சிறந்தவை. பிறைபோல் வளைந்த முகத்தை யுடைய பிறைமுகம் என்னுமோர் அம்பு முன்காலத்தில் வழங்கினதேனும் அது வாளியென்னும் பெயர்க்குக் காரணமாயிற்றென்றல் அத்துணைப் பொருத்தமுடைத்தன்று. வாணம் முன்காலத்தில் அம்பு போலப் போர் முனையில் வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. அதனையே அக்கினி யாஸ்திரமெனப் புராணங்கள் கூறாநிற்கும். இனி, அதற்கினமான வாயு வாஸ்திரம் வருணாஸ்திரம் முதலியவும் கூறப்படுகின்றன. அவற்றை இனமுறையிற் கூறிய இல்பொருளாகவே கொள்ள வேண்டும். இக்கால முறைப்படி அவற்றை முறையே நச்சுக்காற்று (poisonous gas) என்றும், நச்சுப்புனல் (liquid poison) என்றும் கூற இடமிருப்பினும் பொருந்தாது. கண்ணபிரானொடு சண்டை செய்த வாணாசுரன் என்பவன் பலவகை வாணங்களை விட்டதாகத் தெரிகின்றது. இராமாயணத்திலும் நாகாஸ்திரம், பிரமாஸ்திரம் முதலிய வாணச்சிறப்புகள் கூறப்படுகின்றன.

தென்னாட்டுப் பழம் போர்த்துறைகளை விரித்துக் கூறும் தொல் காப்பியத்தில் வாணத்தைப்பற்றி ஒரு குறிப்பு மின்று. உழிஞைப்போரில் நெடுநாள் முற்றியும், அகத்தோன் வருபகை பேணா ஆரெயிலின்கண், ஊர் சுடுவதற்காகப் புறத்தோன் கட்டுவாணங்களை வழங்கி யிருக்கலாமென்று கருத இடமுண்டு. கட்டுவாணங்களை வழங்காவிடினும் எயிலோரம் ஒரு கம்பவாணத்தை நட்டுக் கொளுத்தின், புறத்தோன் கருதியது எங்ஙனம் கைகூடுமென்பது எவர்க்கும் புலனாகும். இது "முரணிய புறத்தோன் அணங்கிய பக்கத்துள்” அடங்கும். அஃதேல், தொல்காப்பியத்துள் இஃதேன் கூறப்படவில்லை யெனின், போர்முனையிற் செய்யப்படுவதெல்லாம் ஓர் இலக்கண நூலிற் கூறப்படாவென்றும், உறுமனத்தானும் உடல்வலியானும் செய்யும் மறப்போரைச் சிறப்பித்துக் கூறுவதே தொல்காப்பிய நோக்க மென்றும், பல வினைத்தொகுதிகளான துறைகளையே தொல்காப்பியங் கூறுமென்றும், உழிஞைப்போரில் ஒரோவிடத்துச் சிறுபான்மை நிகழ்வ தொன்றை நியதியாகக் கூற லொவ்வாதென்றும், ஒருகால் நிகழின் அஃது ‘அணங்கிய பக்க'த்துள் அடங்குமென்றுங் கூறிவிடுக்க. வாணம் நெருப்பின் தொழிலன்றி வயவர் மறமன்று; அதூஉம் இராப் போர்க்கே சிறப்புடைத்து.