உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

பண்பாட்டுக் கட்டுரைகள்

பகல் இரவு என்னும் இருபகுதிகளில், பகலானது வீட்டை விட்டு வெளியேறி வழங்கவும், வேலை செய்து பொருள் தேடவும் இருதிணைப் பொருள்களையுங் காட்சிகளையுங் கண்டு களிக்கவும், அன்பான நண்பருடன் அளவளாவவும், இனத்தாரொடு கூடி உறவாடவும் பெரிதும் உதவுவதாகும். ஆதலால் பகல் இன்பகாலமாக எண்ணப்படுகின்றது. ஆனால், இரவோ மேற்கூறியவற்றிற்கு மிகுதியும் இடமாகாமையானும், தெளிந்த பார்வையின்மையானும் துன்பகாலமாக எண்ணப்படுகின்றது. இதனாலன்றோ, சிறையாளரை இருட்டறையில் அடைப்பதும், நரகத்தை 'இருளுலகம்' என்பதும், துன்பத்தை யிருளாகப் பாவித்துக்கொண்டு நரகாசுரன் மாய்வால் துன்பந்தீர்ந்ததைக் குறிக்கத் தீபாவளியிரவன்று தீபமேற்றிக் களிப்பதும், (இத் தீபமேற்றும் வழக்கம் இக்காலை நின்று விட்டது.) இரவில் வேலைசெய்தலின் அருமை நோக்கியே 'அல்லும் பகலும்', ‘இரவும் பகலும்', 'இரவு பகலாய்' என்னும் தொடர்களில் இரவு முற்கூறப்பட்டது.

இனி, இராக்காலம் பேய்கள் வழங்குங் காலமாகக் கூறப்படுதலால், 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்றபடி அச்சத்திற் கிடமானதுமாகும். அஃதோடு நச்சுயிர் (விஷப்பிராணி)களும் கொடிய விலங்குகளும் வழங்குங் காலமுமாகும். ஆனால் இவையெல்லாம் நம் முன்னோர் கருத்தில் ஓர் துன்பமாகத் தோன்றியில. எவ்வகையொலியும் அடங்கிய உறக்க நிலையே இராக்காலத்தில் ஓர் அழிவுணர்ச்சியைத் தமிழ்மக்கள் உள்ளத்தில் உண்டுபண்ணியிருக்கின்றது. மூச்சு ஒன்று தவிர மற்றப் பேச்சு முதலிய யாவும் ஒடுங்கிய உறக்கநிலை இறப்புநிலைக்கு ஒப்பாயிருப்பதால், அதையே ஓர் அழிவுபோல நம் முன்னோர் கருதி யிருக்கின்றனர். இறந்தவனை 'அடங்கிவிட்டான்' என்றும், ஊரார் உறங்குவதை 'ஊர் அடங்கிற்று' என்றும் கூறுவதை உய்த்துணர்க.

"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு”,

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்"

என்றார் திருவள்ளுவரும்.

(குறள்.339)

(குறள். 926)

பண்டைத் தமிழர் உறக்கநிலையை ஒருவகை அழிவுநிலை யென்றும், அது நிகழ்கின்ற இராக்காலத்தை ஒருவகை அழிவுக் காலமென்றுங் கருதியதை, எல்லாப் பொருள்களும் இறைவனுக்குள் ஒடுங்குவதாகக் கூறப்படுகின்ற ஊழியிறுதிச் சங்கார நிலையை ஓர் இரவிற்கும், அப் பொருள்களின் ஒடுக்கத்தை ஓர் இளைப்பாறலுக்கும் அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதானே விளங்கும். ஆகவே, சிறுமுறையாகவும் பெருமுறையாகவும் பல்வகை யழிவுகளைக் கண்டு, அவற்றை யெல்லை யாகவுடைய பல்திறக் காலப்பகுதிகளையே பற்பல கால அளவுகளாக அவர்கள் கொண்டிருத்தல்