உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

CC

CC

பண்பாட்டுக் கட்டுரைகள்

'ஓதலே யோதுவித்த லுடன்வேட்டல் வேட்பித்திடல் ஈதலே யேற்றலாறும் ஏற்குமந் தணர்தொழிற்பேர் ஓதலே வேட்டலீதல் உலகோம்பல் படைப யிற்றல் மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே" 'படைகுடி கூழமைச்சுப் பற்றிய நட்பினோடு

நெடுமதி லரசியற்கு நிகழ்த்தியவாறு பேதம்!

இடையற வோதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தி னுடனிரை காத்த லேரை யுழவாறும் வசியர்க் காமே" "வசியர்தந் தொழில்க ளாறுள் வகுத்தமுத் தொழில்க ளான பசுவோம்பல் பொருளை யீட்டல் பயிரிடல் புராண மாதி வசைதவி ரனுகூ லம்மாம் வகைத்தொழில் சூத்திரர்க்காம்' என்று சூடாமணி நிகண்டும், நால்வகுப்பார்க்கும் அவ்வாறு தொழில் கூறுதல்

காண்க.

2. பரிமேழலகர் அரசர்க்கும் அறுதொழில் கூறல்

CC

'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மான முடைய தரசு

என்னுங் குறட்கு,

11

(384)

"தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன் னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து, வீரத்தின் வழுவாத தாழ்வின்மை யினை யுடையான் அரசன்” என்று தொடருரை வரைந்து, அதன் விளக்கத்தில், "அவ்வறமாவது ஓதல், வேட்டல், ஈதலென்னும் பொதுத் தொழிலினும், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுத லென்னுஞ் சிறப்புத் தொழிலினும், வழுவாது நிற்றல்" என்று பரிமேலழகரே அரசர்க்கும் அறுதொழில் கூறியிருத்தலால், அறுதொழிலோர் என்னும் பொதுப் பெயர்க்குப் பிராமணர் என்னும் பொருளும், நூலோதுதல் அரசர்க்கும் உரியதாதலால் நூல் மறத்தல் என்பதற்கு வேதமோதாமை என்னும் பொருளும், பொருந்தாமை யுணர்க.

3. தொல்காப்பியர் அரசரொழிந்த மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறல்

CC

'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்"

(தொல். பொருள் புறத் 20)

என்று, தொல்காப்பியர் அந்தணர் (பிராமணர்), வணிகர், வேளாளர் என்னும் மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறியிருப்பதால், அவர் கருத்துப்படியும் அறுதொழிலோர் என்பது அவருள் ஒரு வகுப்பாரை மட்டுஞ் சிறப்பாகச் சுட்டலாகாமை அறிக. ஆரிய முறைப்படி நூலோதலுரிமை வணிகர்க்கு முண்மையை நோக்குக.