உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ce

4

அறுதொழிலோர் யார்?

'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.”

(குறள். 560)

இக் குறளுரைக்கு அடிமணையாயிருப்பது அறுதொழிலோர் என்னுஞ் சொல். அச் சொற்குப் பரிமேலழகர் அந்தணர் என்னுஞ் சொல்லாற் பிராமணர் என்னும் பொருள் குறித்து, “அறுதொழிலாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம். ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று" என்று அதற்கேற்ப விளக்கவுரையுங் கூறினார். இவ் வுரை தவறானதென்பதற்குக் கரணியங்களாவன:

1. நாற்பாலார்க்கும் அறுதொழிலுண்மை

ள்

அந்தணர், அரசர், வணிகர், வேளாள ரென்னும் நால்வகுப்பார்க்கும் அறுதொழில் கூறப்படுவதால், அவருள் ஒரு வகுப்பாரை மட்டும் அறுதொழிலோர் என்று சுட்டுவது பொருந்தாது.

CC

CC

'ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்

ஈதல் ஏற்றல் என்றிரு மூவகை

ஆதிக் காலத் தந்தண ரறுதொழில்'

அரச ரறுதொழில் ஓதல் வேட்டல்

புரைதீரப் பெரும்பார் புரத்தல் ஈதல் கரையறு படைக்கலங் கற்றல் விசயம்"

வணிக ரறுதொழில் ஓதல் வேட்டல்

ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம்" "வேளாள ரறுதொழில் உழவுபசுக் காவல் தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை ஒள்ளிய இருபிறப் பாளர்க் கேவல்செயல்"

"குயிலுவம் வாத்தியங் கொட்டுத லாகும்"

"பருத்திநூல் பட்டுநூல் அமைத்தாடை யாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில்."

என்று திவாகரமும்,