உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

பண்பாட்டுக் கட்டுரைகள் ஆகவே, அவர் இக்காலத்தில் இருந்தாராயின், நில வரம்பீட்டிற்கும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கும் நெறி வகுத்தேயிருப்பார்.

அவர் இன்று இல்லாவிடினும், அவர் போங்கிலேயே, இந்தியத் தலைமை மந்திரினியாரான திருமாட்டியார் இந்திராகாந்தி யம்மையார், இருபான் குறிப்புப் பொருளாட்சித் திட்டத்தை வகுத்திருப்பது, இந்தியர்மீது இறைவன் கொண்ட பேரருளென்றே கருதுதல் வேண்டும்.

மக்கள் ஆறறிவு படைத்த உயர்திணை என்னும் உயர்ந்த உயிரினத்தைச் சேர்ந்தவராதலால். புறவுடம்பிற்குரிய அவியுணவை மட்டுமன்றி அகவுடம்பிற்குரிய அறிவுணவையும் அரும்பாடுபட்டேனும் தேடி நுகர்தல் வேண்டும். அவியுணவென்றது அவித்த அல்லது சமைத்த உணவை. நாகரிக மக்களுணவு அவிக்கப்பட்டதே என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அறிவுணவு செவிவாயிலாகக் கேட்டு உட்கொள்ளப் படுதலால் செவியுணவெனப்பட்டது,

"செவிவா யாக நெஞ்சுகள னாகக்

கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து

என்று நன்னூற் பாயிரங் கூறுதல் காண்க.

55

(15601. 40)

அவியுணவை மட்டும் ஒருவன் விரும்புவானாயின், அவன் உயர் திணையைச் சேர்ந்தவனாகான். உடம்பால் உயர்திணையாயினும் உளத்தால் அஃறிணையாகவே கருதப்படுவான். அவனால் மக்களினத்திற்கே இழிவு உண்டாகும். அதனால்,

“செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.

என்று செவியுணவின் பெரும் சிறப்பை எடுத்துக்கூறி,

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.

(412)

(420)

என்று செவியுணவு கொள்ளாதவனை இறப்ப இழித்தும் பழித்தும் கூறினார் திருவள்ளுவர்.

ஆதலால், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய ஒப்புயர்வற்ற தமிழை, தாய் மொழியாகக் கொண்டிருந்தும், அதனைச் சற்றும் பேணாது, தமிழ் வந்து வயிற்றை நிறைக்குமா என்று புறக்கணித்துக் கூறுவது, தன்னைத் தமிழ னென்று சொல்லிக் கொள்பவனுக்குச் சற்றும் தகாது. செவியுணவுண்டு கொண்டே அவியுணவும் பெற இயலும்போது, ஒருவன் ஏன் தமிழைத் தள்ள வேண்டும்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழ்நாட்டில் தமிழரிடைத் தமிழிற் பேசித்தானே வாழவொண்ணும்! அது கருதியேனும் கூட்டுடைமைக் கொள்கையன் தமிழைப் போற்றுக. தான் போற்றாவிடினும் போற்றுவாரை இயன்றவரை போற்றுக.

- “தென்மொழி" கும்பம் 1976