உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அவியுணவும் செவியுணவும்

66

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

33

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்(று) உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே."

என்பவை திருமூலர் திருமந்திரங்கள்.

(725)

எனவே, மாந்தன் இருமை வாழ்விற்கும் இன்றியமையாதது உடம்பு என்பது பெறப்பட்டது. இத்தகைய உடம்பை உருவாக்குவதும் இறுதிவரை நிலைப்படுத்துவதும் உணவே.

உணவை விளைப்பது உழவுத்தொழில். அத் தொழிலை மக்கள் அனைவரும் மேற்கொள்ளினும், இரு நிலைமையால் உணவுத் தட்டு ஏற்படும். அவற்றுள் ஒன்று மழையின்மை; இன்னொன்று மக்கட் பெருக்கம்.

மழையின்மை நீடிக்காது; உலகம் ஒருங்கே அழியும் ஊழியிறுதி வரை, பார் முழுதும் பரவவுஞ் செய்யாது. ஆதலால், பஞ்சகாலத்தில் வளநாட்டினின்று வறட்சி நாட்டிற்கு வேண்டிய உணவை வருவித்துக் கொள்ளலாம். ஆயின், மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் உணவுத்தட்டு நிலைத்ததும் நீக்க முடியாததுமாகும். மழை ஏராளமாகப் பெய்யினும் உணவுப்பொருள் விளைவது நிலமேயாதலாலும், மக்கட் பெருக்கத்திற் கேற்ப நிலமும் விரிவுறாமையாலும், நிலவரம்பீடும் பகிர்ந்துண்டலும், குடும்ப மட்டுப்பாடும் அரசியலேற்பாடாக அமைகின்றன. இவ்வகை அரசியலே கூட்டுடைமை (Socialism) என்பது.

கூட்டுடைமை என்னும் ஆட்சிமுறை இக்காலத்ததே யானாலும், அதன் உயிர்நாடிக் கூறான பகிர்ந்துண்டலை, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தெய்வப் புலமைத் திருவள்ளுவர்,

"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்ட லரிது,”

(227)

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை,

(322)

"தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

என்னும் குறள்மணிகளால் நெறியிட்டுக் கூறியுள்ளார்.

(1107)

அவர் காலத்தில் மக்கட் பெருக்கமுமில்லை; நிலக்குறைவுமில்லை.

அவையிருந்திருப்பின்.

“இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்"

என்று கூறியிரார்.

(1040)