உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

அவியுணவும் செவியுணவும்

மாந்தன் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத காற்று, நீர், உணவு என்னும் மூன்றனுள், முதலது உடல் நலத்திற்கேற்ற இடத்திலெல்லாம் இருக்குமிடத்திலேயே முயற்சியின்றி இலவசமாகப் பெறக்கூடியது; இடையது பஞ்சமில்லாத காலமெல்லாம் சிறு முயற்சியாற் பெறக்கூடியது; இறுதியதே விளைவுக்காலமெல்லாம் முயற்சியினாலோ, விலைகொடுத்தோ பெறக் கூடியதாகும்.

நாகரிக வாழ்க்கைக்கு வேறு பல பொருள்களும் வேண்டுமாயினும், உயிர்வாழ்க்கைக்கு வேண்டியதே இன்றியமையாததாதலின், மாந்தன் கவலைப்பட்டுத் தேட வேண்டிய முதன்மையான பொருள் உணவொன்றே.

உணவினாலேயே உயிர் உடம்பில் நிற்பதுடன், உடம்பும் உரிய வளர்ச்சியடைகின்றது. உணவின் மாற்றமே உடம்பு. உடம்பின் நன்னிலையே உயிர் நிலை,

"நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரி யோரீண்(டு)

உடம்பு முயிரும் படைத்திசி னோரே.'

(புறம்.18)

உணவு பெறுதற்குரிய பல்வேறு தொழில்களைப் பயில்வதற்கும், அவற்றைச் செய்தற்கும், உரிய பருவத்தில் மணம் புரிவதற்கும், பின்னர் மக்களைப் பெற்று வளர்த்தற்கும், நீண்ட காலம் உடம்பின் நன்னிலை வேண்டியிருத்தலின், உலக வாழ்க்கையை விரும்புவோரெல்லாம் உடம்பைப் பேணுவது இன்றியமையாத தாகின்றது.

இனி, பண்பட்ட மக்கள் இம்மை வாழ்க்கைக்கு மட்டுமன்றி மறுமை வாழ்க்கைக்கும் அறிவுபெற வேண்டியிருத்தலின், அதன்பொருட்டும் உடம்பின் நீள் நன்னிலை இன்றியமைாததாகும்.

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

(724)