உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வனப்புச் சொல்வளம்

ஓசனித்தல் = பறவை சிறகடித்தல்.

கல்லூரி = கல்வி கற்கும் இடம் (College).

பிழியல் = பிழிந்தெடுத்த கள் அல்லது இன்சாறு. வடகம் = மேலாடை.

=

வளமனை = பொருள் நிறைந்த சிறப்பில்லம்.

31

இனி, யாழ் என்னும் வீணைக் கருவிக்குரிய குற்றங்களையும், பாம்பு நஞ்சின் எழு வேகங்களையும், குழந்தை வளர்ப்பு முறையையும், அறு வகைப் பெரும்பொழுதிற்கேற்ற ஊணுடைகளையும், விரித்துக் கூறுவதும் சிந்தாமணிக்குச் சிறப்பென்க. ஆயின், இவை பொருள்வளத்தின் பாற்படும். பெருங்கதைச் சிறப்புச் சொற்கள்

கச்சம் = ஒரு பேரெண்.

கடிகையாரம்

=

கடிகாரம். இது தூய தென்சொல்லே. கடிகாயந்திரம் என்னும் வடசொல்லின் திரிபன்று. கடிகை = வட்டமானது, ஆரம்

=

ஓர் ஈறு.

கார்முகம் = வானவில்.

குப்பாயம் = மேற்சட்டை (Coat).

ஓதி = புறக்கண்ணாற் காணவியலாத நெடுந்தொலைவுச் செய்திகளையும் அகக்கண்ணாற் கண்டறியும் ஆற்றல்.

திருவில் = வானவில்.

தேசியச்சேரி = அயல்நாட்டவர் சேர்ந்துவாழும் குடியிருப்பு, நானம் = தேய்த்துக் குளிக்கும் விரைநெய் (வாசனை யெண்ணெய்). படமாடம் = கூடாரம் (Tent).

பாம்புரி = ஆளோடி.

பிடிகை = ஒற்றையிருக்கை யூர்தி.

மணிமேகலைச் சிறப்புச் சொற்கள்

ஆண்டலைப்புள் = ஆண்டலை வடிவான, இறந்துபட்ட ஒரு

பறவையினம்.

ஆலமர் செல்வன் = தட்சிணாமூர்த்தி(வ.).

பொதியறை = காற்றுவர வழியில்லாத நிலவறை.

வட்டிகை = எழுதுகோல்(Painter's brush).

வட்டுடை = அரைக்காற் சட்டை(Drawers).

இங்ஙனமே ஏனை வனப்புகளிலும் ஒருசில சொற்கள் சிறப்பாக

வுளவென அறிக.

- “செந்தமிழ்ச் செல்வி" மார்ச்சு 1965