உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறுதொழிலோர் யார்?

39

அருளாளராய் அந்தணர் என்னும் பெயருக்குத் தகுதியுடையாரா யிருந்தனர். கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர், தம் காலத்திலேயே ரியம் வேரூன்றியதைக் கண்டதனால், துறவியர்போல் வீடுவாசலின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த பிராமணரையும்

அந்தணராகக் கொண்டு,

CC

"நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

தனிச்சிறப்புத் தொழில் என்னும் உண்மையை,

(தொல். பொருள் மர. 71)

என்று கூறினாராயினும், வணிகர்க்கு வாணிகமும் வேளாளர்க்கு உழவுமே

"வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை"

"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"

என்னும் நூற்பாக்களாற் குறித்தார்.

(60979)

(609 82)

இங்ஙனமிருந்தும், நிகண்டுகள், அந்தணர் அரசர் முதலிய நால் வகுப்பான தமிழ்ப் பாகுபாட்டை, ஆரியர் (பிராமணர்), பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத் தந்நலத்திற்கேற்ப முறையே படிமுறைத் தாழ்வுற்ற நிலையான நாற்பெரும் பிறவிக் குலப் பாகுபாடாகத் திரித்து, பிராமணர்க்கு ஆரிய மறையான வேதமோதுதலும் வேள்வி செய்வித்தலும், சத்திரி யர்க்குப் போர் புரிதலும் வேள்வி செய்தலும், வைசியர்க்கு வாணிகமும் உழவும் செய்தலும், சூத்திரர்க்குக் கைத்தொழிலும் மேல் மூவகுப்பார்க்கும் ஏவல் செய்தலும், தனிச்சிறப்புத் தொழிலென வகுத்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றியே, ஆரியரல்லாதவரும் வேதமும் வேள்வியும் வேண்டாதவருமான தமிழ் நால்வகுப்பார்க்கும் அவ்வாறு தொழில் வகுத்துக் கூறியுள்ளமை, தமிழ் மரபிற்கும் தமிழர் உயர்வுக்கும் எள்ளளவும் ஏற்காத இழிநிலையும் கடைப்பட்ட அடிமைத்தனமுமே காட்டும்.

8. ஆரியத்தை எதிர்ப்பதே திருக்குறள் நோக்கம்

திருவள்ளுவர் அறம்பொருளின்பம் என்னும் முப்பால்பற்றி இயற்றியருளிய அறநூல் வையகம் முழுவதற்கும் பயன்படும் வாயுறை வாழ்த்தே யாயினும், தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று விடுவிப் பதே அதன் அடிப்படை நோக்கமென்பது,

CC

‘அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்",

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்",

(30)

(46)