உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

பண்பாட்டுக் கட்டுரைகள்

ee

"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்",

"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்",

(133)

(144)

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று",

(259)

CC

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை",

(656)

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்",

(972)

CC

‘சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால்

உழந்து முழவே தலை",

(1031)

CC

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றாது

எழுவாரை யெல்லாம் பொறுத்து”,

(1033)

இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்'

11

(1035)

என்னுங் குறள்களாலும், இவை போன்ற பிறவற்றாலும் அறியப்படும். இங்ஙனம் ஆரியத்தைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவுங் கண்டிப்பவரும்,

CC

'தந்தை மகற்காற்று முதவி யவையத்து

முந்தி யிருப்பச் செயல்"

என்று கல்வியை எல்லா மக்கட்கும் பொதுவாகக் கூறியவரும்,

"விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்"

(67)

(410)

என்று வேதத்தைக் குறியாது வேறு விழுமிய நூல்களையே குறித்தவருமான திருவள்ளுவர், பிராமணரை ஒருபோதும் போற்றாரெனத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

இங்ஙனம் அவர் தமிழர்க்கு விழிப்புணர்த்தி ஈராயிரம் ஆண்டிற்கு மேலாகியும், இன்றும் அவர் கருத்தறியாது, பரிமேலழகர் உரையை மறுக்கப் பாரில் எவருள்ளார் என்று தருக்கும் தமிழ்ப்புலவரும் உளர். அவர் “பேதைக் குரைத்தாலுந் தோன்றா துணர்வு” என்னும் பழமொழிக் கூற்றை (93) விளக்கப் பிறந்தவரே யாவர்.

இனி, அறுதொழிலோர் யாரெனின்,

Ce

உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை கற்பம் என்றித் திறத்தறு

தொழில் கற்ப நடையது கருமபூமி"

என்னும் திவாகர நூற்பாவிற் குறித்த அறுதொழிலைக் கற்றவரே யென்க. என் திருக்குறள் தமிழ் மரபுரையையும் பார்க்க.

- “செந்தமிழ்ச் செல்வி" ஆகத்து 1970