உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

501ஆம் குறள் விளக்கம்

ee

'அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்

றிறந்தெரிந்து தேறப் படும்"

இதன் புணர்ச்சி பிரிப்பு

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்.

இதன் உரைகள்

(குறள். 501)

மணக்குடவர்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து பின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான் என்றவாறு.

முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டும் என்றார்; பின்பு தேறப்படும் என்றார்.

பரிப்பெருமாள்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து, பின்பு தேறப்படும் என்றவாறு.

மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியாதல், பொருளை வேண்டியாதல், இன்பத்தை வேண்டியாதல், அச்சம் உளதாம் என்றாதல் அரசன் மாட்டுத் தீமையை நினையாமையை ஆராய்ந்து, பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது.

பரிதியார்: தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான் என்றவாறு.

காலிங்கர்: மறைமுதலாகிய நூல் யாவற்றிலும் சொன்ன அறம் பொருள் இன்பம் வீடு என வகுத்த நால்வகையாகலின், அவற்றுள் அறமானது, பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இருமை இன்பம் எய்துவிப்பது என்றும்; அவற்றுள் பொருளானது, பலவகைத் தொழிலினும் பொருள் வருமேனும் தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என்றும்; மற்று இனி இன்பமாவது, கற்பின் திருந்திய பொற்புடையாட்டி இல்லறத்துணையும் இயல்புடை மக்களும்