உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

பண்பாட்டுக் கட்டுரைகள் இருதலையானும் இயைந்த இன்பம் என்றும்; மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது, பேதைமையுற்ற பிறப்பு இறப்பு என்னும் வஞ்சப் பெருவலைப் பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இஃது என்றும் - இங்ஙனம் இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அடுக்கும் அரசர்க்கு என்றவாறு.

உயிரெச்சம் என்பது முத்தி என்றது.

பரிமேலழகர்: அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும் உபதை நான்கின் திறத்தான், மன இயல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும் என்றவாறு.

அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால் இவ் வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத்தலை வனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரால் 'இவ்வரசன் இவறன்மாலைய னாகலின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை?’ எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்றுதொட்டு உரிமையொடு பயின்றாள் ஒரு தவமுதுமகளை விட்டு, அவளால் 'உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கை கூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, 'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்; என்று தான் காவல் செய்து, ஒருவனால் 'இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கினிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை?’ எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், இந் நான்கினும் திரிபிலனாயவழி எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற்பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது பிறரெல்லாம் இதனை 'உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.

இனி இதற்குத் தமிழ்மரபுரை வருமாறு:

அரசனால் ஆட்சித் துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்க் கேட்டிற்கு அஞ்சும் அச்சமும்