உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

பண்பாட்டுக் கட்டுரைகள்

சேரன், கேரளன் என்பவை பிந்திய வடிவங்களாகும். அவற்றுள்ளும் மிகப் பிந்தியது கேரளன் என்பது. பண்டைத் தமிழ்நூல்களிலெல்லாம் சேரல் என்பதே பெருவழக்காய் வரும். பிற்காலத்துப் புராணங்களிலெல்லாம் கேரளன் என்பது பெருவழக்காய் வரும்.

சேரன் என்னும் பெயரொடு மான் என்னும் பெயர் சேர்த்துச் சேரமான் என்று வழங்குவதுமுண்டு. மான் என்பது மகன் என்பதன் திரிபு. பெருமகன் பெருமான், மருமகன் - மருமான்.

இனிச் சேரனுக்குரிய பிற பெயர்களாவன :

வில்லவன்

-

வில்லையுடையவன்.

கொங்கன் - கொங்குநாட்டை யுடையவன். குடக்கோ - குடநாட்டரசன். குடம் -மேற்கு. குட்டுவன் - குடநாட்டரசன் குடம் - குட்டம். குடகன் குடநாட்டரசன்.

கோதை - (வில்லுக்காக) முன்கைத் தோற்கட்டுடையவன். உதியன் - உயர்ந்தவன், உயர்ந்த மலைநாடன். வானவன் – வானத்தை யளாவும் மலைநாடன். வானவரம்பன் - வானத்தை யளாவும் மலைநாடன். மலைநாட்டரசன்.

மலையமான்

சேய் மலைத் தெய்வமாகிய முருகன் போன்றவன்.

சின்னமும், அங்கமும் பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் கூறாது டப்பட்டன.

இதுகாறுங் கூறியவற்றால் தமிழரும், தமிழரசரும் ஆரிய வருகைக்கு முன்பே, தமிழ்நாட்டி லிருந்தவர்களென்றும், அவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடிகளே யென்றும், அவர்கள் பெயர்களெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யென்றும், அவை வடமொழியிற் பலவாறு திரியுமென்றும், தமிழரசருள் பாண்டியன் காலத்தால் முற்பட்டவன் என்றும், சோழன் இடைப்பட்டவன் என்றும், சேரன் கடைப்பட்டவன் என்றும் தெரிந்து கொள்க.

பாண்டியன் முற்பட்டவன் என்பது தமிழ்நாடன் என்னும் பெயரினாலும், சங்க வரலாற்றாலும், சரித்திரத்தினாலும்,

CC

‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

(சிலப். 11:19-22)

என்னும் சிலப்பதிகார வடிகளாலும், முழுகின தமிழகமுண்மையிலும், மேனாட்டுக் குறிப்புகளாலும் அறியப்படும். முழுகின தமிழகம் பாண்டி நாட்டுப் பகுதியாகும். அதுவே மக்கள் முதன்முதற் றோன்றியவிடம்.