உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மன்னர் பெயர்

நாவலந் தீவு = நாவன் மரம் மிகுந்த பரதகண்டம்.

69

நெல்வேலி, திருநெல்வேலி, நென்மேனி, நெல்லூர் முதலியன நெல் விளையும் இடங்கள்.

புளியம்பட்டி, புளியங்குடி, அத்திகுளம், வேப்பங்குளம், பனையூர், பனையடிப்பட்டி முதலியன மரங்களாற் பெற்ற பெயர்கள்.

எருக்கலங்குடி செடியாற் பெற்ற பெயர். இங்ஙனமே பிறவும். சோளம் விளையும் நாடு தானியாகுபெயராகச் சோளம் எனப்பட்டது. சோளம் சோழம் எனத் திரியும்.

=

ள-ழ. cf. தோள் + அன் = தோளன் தோழன். தோள்போல் உதவுபவன் அல்லது தோளிற் கைபோடுபவன்.

சீகாளி - சீகாழி. யாளி - யாழ். நாளி - நாழி. தேளி - தேழி, தேள்போற் கொட்டுவது.

சோழநாட்டை யுடையவன் சோழன்.

இனி, சோழனுக்குரிய மறுபெயர்களாவன :

சென்னி = தலைவன், சென்னி = தலை.

கிள்ளி = பகைவர் தலையைக் கிள்ளுபவன்.

அபயன் = பயத்தை நீக்குபவன், அடைக்கலந் தருபவன். வளவன் = வளநாட்டை யுடையவன்.

செம்பியன்

=

சிபியின் வழித்தோன்றல்.

சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில.

3. சேரன் : சாரல் - சேரல் - சேரன்.

தமிழ் வேந்தர் மூவருள்ளும் சேரனே மலைநாட்டை யுடையவன். சாரல் என்பது மலையின் அடிவாரத்தையும், மலைநாட்டையுங் குறிக்கும். பின்பு இடவாகுபெயராய் அம் மலைநாட்டை ஆள்பவனைக் குறித்தது.

சாரல் என்பது சேரல் என்று திரியும். உக. சார் - சேர்.

சேரல் என்பது சேரன் என்று திரியும்.

ல-ன போலி. cf. மறன் - மறல், மறலி - எமன். திறன் - திறல்.

சேரல் என்பதே சேரன் பழம்பெயராகும்.

எ-டு : குடக்கோச் சேரல், மாந்தரஞ் சேரல்.

சேரல் + அன் = சேரலன் - கேரளன்.

ச-க, போலி. cf. சீர்த்தி - கீர்த்தி, சுலவு - குலவு.

ல-ள, போலி cf. இறலி - இறளி, கசலி - கசளி.