உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

பண்பாட்டுக் கட்டுரைகள்

உவமையாகுபெயராய் வீரனைக் குறிப்பது செய்யுளிற் பெருவழக்கு. தென் னாட்டார் காளை என்னும் பெயரைத் தம் சிறார்க்கிடுவது இன்றும் வழக்கம். இப்போதுள்ள சிவகிரி ஜமீன்தார் அவர்களின் பெயர் செந்தட்டிக் காளைப் பாண்டியன் என்பது. ஆகவே பாண்டி யென்பதற்கு "வீரன்" என்பதே பொருளாம். அஃது அன் விகுதி பெற்றுப் பாண்டியன் என நிற்கும். பாண்டியன் வீரத்தைச் சங்க நூல்களானும், “பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே" என்னும் புகழேந்தியார் கூற்றானு முணர்க.

இனி, பாண்டியனுக்குரிய மறுபெயர்களாவன: செழியன் = செழிய நாட்டை யுடையவன். தென்னவன் = தென்னாட்டரசன்.

வழுதி = புலவரால் வழுத்தப்படுகின்றவன்.

மாறன்

=

பகைவரொடு மாறுகொண்டவன்.

மீனவன் = மீனக்கொடி யுடையவன்.

கைதவன் = தன் கையை வெட்டினவன்(பொற்கைப் பாண்டியன். அவனுக்குப் பின்னால் ஏற்பட்ட பெயர்)

பஞ்சவன் = ஐந்து சிற்றரசரை ஆண்டவன். (கல்வெட்டுகளையும், சரித்திரத்தையுங் காண்க.) முல்லை, குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலங்களை யுடையவன் என்று பொருள் கூறல் பொருந்தாது. கௌரியன்

=

கௌரியின் வழித்தோன்றல்.

கௌரி தடாதகைப் பிராட்டியாரான பார்வதி.

சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில.

2. சோழன் : சோளம் சோழம் சோழம் + அன் = சோழன்.

-

சோளம் என்பது மக்காச்சோளம்; கள்ளர் வெட்டிச் சோளம் என்றும் கூறப்படும்.

மக்காச்சோளம் சோழநாட்டிலேயே சிறப்பாய் விளைகின்றது பாண்டிநாட்டிற் பயிரிடப்படுவதேயில்லை. கொங்குநாட்டிலும், பிற சேர நாட்டுப் பகுதிகளிலும் விளைந்தாலும், சிற்றுண்டியாய்த் தின்னத்தக்க அவ்வளவு சிற்றளவாகவே விளைகின்றது. சோழநாட்டிற் கள்ளருக்குச் சிறந்த வுணவாகின்றது. கள்ளர் அதை மிகுதியாகப் பயிரிடுகின்றனர். அதனாலேயே கள்ளர்வெட்டிச் சோளம் எனப் பெயர் பெற்றது. கள்ளர் என்னும் வகுப்பார் சோழநாட்டிலன்றிப் பிற நாட்டிலில்லை. இதனாலும் சோளம் சோழநாட்டிற்கே சிறப்பென்பது பெறப்படும்.

தாவரப் பொருள்களால் இடங்கள் பெயர் பெறுவது சாதாரணம்.

=

எ-டு : பொழில் (சோலை) உலகம். உலகமுழுதும் முன்காலத்தில் ஒரே சோலைபோல் தோன்றிற்று.