உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மன்னர் பெயர்

67

அரங்கு கீறி எறிந்து விளையாடுவது. வட்டமாக நறுக்கப்பட்ட ஓடு வட்டு எனப்படும். வட்டு என்பது கருவியாகுபெயராய் அதைக் கொண்டு ஆடும் விளையாட்டையும் உணர்த்தும்.

'கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்

(நற். 3)

வட்டு என்பதன் பரியாயப் பெயராகவே பாண்டி யென்பது தென்னாட்டில் வழங்குகின்றது.

தொட்டி, புட்டி, விட்டி என்பன தொட்டில், புட்டில், விட்டில் என்று நின்றாற்போல, பாண்டி என்பதும் பாண்டில் என நிற்கும்.

பாண்டில்

=

வட்டம். பாண்டில் என்பது வட்டம் என்னும் மூலப்

பொருள்பற்றியே பல பொருள்களை யுணர்த்தும்.

பாண்டில்

=

1. அகல், வட்டமாயிருப்பது.

2. காளை, வட்டமாய் அல்லது உருண்டிருப்பது. 3. கைத்தாளம், வட்டமா யிருப்பது.

4. நாடு.

ஒரு நாட்டை அல்லது நாட்டுப் பகுதியை வட்டம், வட்டகை, வட்டாரம் என்று சொல்வது வழக்கு. மண்டலம் என்பதும் வட்டத்தின் பரியாயப் பெயரே. இங்கிலீஷிலும் 'circle' என்று நாட்டுப் பகுதியைக் கூறுவர். 5. சக்கரம், வட்டமாயிருப்பது.

6. 'பண்டி (வண்டி).

=

பண்டி யென்பது வண்டியென்பதன் திரிபு. ப-வ, போலி. வண்டி-வள் பகுதி, தி விகுதி. வள் + தி வண்டி, வளைந்திருப்பது. வண்டி யென்பது முதலில் சக்கரத்தையும் பின்பு உறுப்பாகுபெயராய்ச் சகடத்தையும் குறிக்கும். பண்டி என்பதே பாண்டி, பாண்டில் எனத் திரியும்.

"பாண்டில் எடுத்தபஃ றாமரை கீழும் பழனங்களே' எனும் திருக்கோவை யடியில் பாண்டில் என்பது கிண்ணம் என்னும் பொருளில் தாமரைக் குவமையாய் வந்துள்ளது. கிண்ணம் வட்டமா யிருப்பது.

வட்டம் என்னும் சொல் உருட்சியையும், திரட்சியையும் குறிக்கும். ஓர் உருண்டையின் பரப்புத் தூரத்தில் வட்டமாகவே தோன்றும்.

பாண்டியன் குதிரைக்குக் கனவட்டம் என்று பெயர். ஓர் இளைஞனை இளவட்டம் என்பர் தென்னாட்டார். வட்டம் என்பதைப் போலவே அதன் பரியாயப் பெயராகிய பாண்டில் என்பதும் உருட்சியும், திரட்சியுமாகிய பொருள்களை யுணர்த்தும்.

பாண்டில், உருட்சியான ஒரு காளையை யுணர்த்துவது போல உருட்சியான ஒரு வீரனையும் உணர்த்தும். காளை என்னும் பெயர்

1. (கொல்லாப் பண்டி எனச் சிலப்பதிகார உரையில் வழங்குவது காண்க.)