உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

எ-டு : குமி - குவி. மிஞ்சு - விஞ்சு.

பண்பாட்டுக் கட்டுரைகள்

ழ வடமொழியில் ட ஆகும். இங்ஙனம் தமிழ் என்னும் சொல் வட மொழியில் த்ரவிட என்றாகும். தமிழகம் என்னும் சொல் கிறித்துவுக்குப் பன்னூறாண்டிற்கு முன்னரே மேலை நாடுகளில் Damurica - Lemurica - Lemuria என்று பலவாறு திரிந்து வழங்கி யிருப்பவும், அதற்குப் பின் இந்தியாவிற்கு வந்த ஆரிய வாய்ச்சொல்லின் திரிபென்பது சற்றும் பொருந்தாது.

தமிழ் மன்னர் பெயர் வடமொழிப் பழங் காவியங்களாகிய பாரத இராமாயணங்களிற் கூறப்பட்டுள. உதியன் என்னும் ஓர் சேரநாட் டரசன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியமைபற்றிப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று பழந்தமிழ் நூல்களிற் பாராட்டப்படுகின்றான். வான்மீகி இராமாயணத்திற் றமிழ் மன்னரைப் பற்றிய குறிப்பு, பிற்காலத் திடைச் செருகலென்று சிலர் புறக்கணிக்கலாம். இராமர் தெற்கே வந்து அகத்தியரைக் கண்டதை எவரும் மறுக்கார். அகத்திய ருண்மையானே பாண்டிய னுண்மையும் அறியப்படும். பாரதத்திற்கு முன்னமே பாண்டிய னுண்மை இராமாயணத்தால் விளங்காவிடினும், கிறித்துவுக்கு முன்னைய மேனாட் ட்டுப் பூமி சாத்திரிகள் குறித்துள்ள தமிழகப் படங்களானும், பிரித்தானியப் பொருட்காட்சிச்சாலைத் தலைவர், Dr. ஹால் என்பவர் பாபிலோனியக் குடைபொருள்கள்பற்றிக் கூறியுள்ள ஆராய்ச்சி யுரையானும் விளங்குவ

தாகும்.

பாண்டு,

பாண்டியன் என்னும் பெயரொப்புமை பற்றியும், பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை வந்தபோது பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதைபற்றியும், மகாவம்சம் என்னும் இலங்கைச் சரித்திர நூலில் பாண்டியன் என்னும் பெயர் பாண்டி, பாண்டு எனத் திரிந்திருப்பது பற்றியும் ஆரியர் வருகைக்கு முன்னமே வழங்கிய பழந் தமிழ்ப் பெயராகிய பாண்டியன் என்பதை, பாண்டு என்பதினின்றும் திரிந்த பாண்டவன் என்னும் தத்திதாந்தத் திரிபென்று கூறுவது மொட்டைத் தலைக்கும், முழங்காற்கும் முடிபோட்ட தொக்கு மன்றோ?

பாண்டியன், சோழன், சேரன் என்னும் பெயர்கள் வடமொழியாயின், டமொழியில் அவற்றிற்குப் பொருளிருத்தல் வேண்டும். பாண்டியப் பெயர்க்குக் கூறும் வடமொழிப் பொருள் சரித்திர வாயிலாய் மறுக்கப் பட்டது. சோழசேரப் பெயர்கட்குப் பொருந்தப் புளுகும் பொருளும் வடமொழியி லில்லை. இனி, இத் தமிழ் மன்னர் பெயர்கள் தமிழ்ச் சொற்களாயின் அவற்றிற்குப் பொருள் என்னை யெனிற் கூறுதும்:

=

1. பாண்டியன் - பாண்டியன் பாண்டி + அன்

பாண்டி என்பது வட்டமென்னும் பொருளிலேயே வழங்கப்பட் டுள்ளது. பாண்டி, ஒரு விளையாட்டு. ஓட்டை, வட்டமாக நறுக்கி நிலத்தில்