உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9

தமிழ் மன்னர் பெயர்

பண்டைத் தமிழ் மன்னர்க்குப் பல பெயர்கள் வழங்கினும் அவற்றுட் பாண்டியன், சோழன், சேரன் என்பவை மிக முதுமையும், முதன்மையும் பற்றியவாகும். பாண்டியன், சோழன், சேரன் என்பதே கால முறையாயினும், இசைவுபற்றிச் சேரன், சோழன், பாண்டியன் எனத் தலைமாற்றிக் கூறப்படும்.

தமிழரசர் கொடிவழிகள் ஆரிய வருகைக்கு முன்னமே தமிழ் நாட்டிலிருந்தும், அவற்றின் பெயர்கட்கு வடமொழி மூலங்காட்டினார் கால்டுவெல் கண்காணியார். மேனாட்டறிஞர் எத்துணையோ ஆராய்ச்சி வன்மையும், நடுவுநிலைமையும் உடையரேனும், இந்திய மொழிகளெல்லாம் வடமொழிவழி யென்னுமோர் தவற்றெண்ணம் அவர் மனத்திற் குடிகொண் டமையின், அவராராய்ச்சி சிற்சிலவிடத்துப் பயன்பட்டிலது. சேர சோழ பாண்டியர் தமிழ் மன்னரா யிருப்பவும் அவர்க்குப் பெயர் வடமொழி யினின்று வந்தன வென்பது எங்ஙனம் பொருந்தும்? ஆரிய மரபினரா யிருந்திருப்பினன்றோ அவர்க்கு ஆரியப் பெயர் வழங்கி யிருக்கும்? சேர சோழ பாண்டியப் பெயர்கள் சேர சோழ பாண்டிய ரென்று அசோகக் கல்வெட்டி லிருக்கின்றனவென்பது ஆரிய வழிக்கு ஆதாரமாகுமா? ழகரம் தெலுங்கிலும், வடமொழியிலும் டகரமாய்த் திரியும்.

எ-டு : தெலுங்கு

வடமொழி

பீழை - பீட

கோழி கோடி நாழி - நாடி

கிழங்கு – கெட்டா

நாளம் = மூங்கில். நாளி - மூங்கிலாற் செய்யப்பட்ட படி. இக்காலத்தும் மூங்கிற் படிகளைச் சிற்றூர்களிலும், சிறு கடைகளிலும் காணலாம். நாளி நாழி. சீகாளி - சீகாழி.

சோழன் என்பது சோடன் என்பதன் திரிபென்றும், நாழி என்பது நாடி என்பதன் திரிபென்றும், தமிழர் என்பது திரவிடர் என்பதன் திரிபென்றும், பாண்டியன் என்பது பாண்டுவினின்றும் திரிந்ததென்றும் கூறுவர் கால்டுவெல் கண்காணியார்.

வட

மெய்யெழுத்துகள் ரகரத்தோடு சேர்ந்து மொழிமுதல் நிற்பது மொழியிற் பெரும்பான்மை. அதன்படி த என்பது த்ர என்றாகும். மகரத்திற்கு வகரம் போலியாகும்.