உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

பண்பாட்டுக் கட்டுரைகள்

தமிழே தாய்மொழியாயிற்று. (கடைச்சங்கத்தில் நக்கீரனார் கபிலர் முதலிய அந்தணரே தலைமை பெற்றிருந்தனர். இற்றைப் பார்ப்பனரோ தம் முன்னோர் செய்த நன்றியை யெல்லாம் சிதைத்து வருகின்றனர்.) கடைச்சங்க காலத்திற்குப் பின், பல பாண்டியரிருந்தும் எங்ஙனம் தமிழை வளர்த்தி லரோ, அங்ஙனம் தலைச்சங்கத்துக்கு முன்னும் பல பாண்டியர் தமிழை வளர்த்திலர். அகத்தியர்க்கு நெடுங்காலத்திற்கு முன்னர்தான் தமிழரே தமிழை ஆதரித்திருக்க வேண்டும்.

- “செந்தமிழ்ச் செல்வி" கன்னி 1931