உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகத்தியர் ஆரியரா? தமிழரா?

63

கபாடபுரத்தில் இடைச்சங்கம் நிறுவப்பட்டது. தொல்காப்பியர் முதலிய அகத்தியர் மாணவர் பன்னிருவரும் தலைமை பெற்றிருந்தனர். அகத்தியமும் (தலைச்சங்கத்திற்கும் இடைச்சங்கத்திற்கும் இடையில் தொல்காப்பியர் செய்த) தொல்காப்பியமும் இலக்கணமாயின. அகத்தியர் இடைச்சங்கத்தில் நீடித்திருக்கவில்லை. அகத்தியமும் அங்ஙனமே. தலைச்சங்க காலத்தில் மக்கட்கு அறிவும் ஆற்றலும் ஆயுளும் அதிகமா யிருந்ததினால் முத்தமிழும் ஒருங்கு பயிலப்பட்டன. இடைச்சங்க காலத்தில் அவை மிகக் குறுகினதினால் முத்தமிழ் வேறுவேறு பிரிந்தன.

இடைச்சங்கம் இராமாயண காலம் (கி.மு. 2000). வடமொழியில் முதற்காவியம் வான்மீகியிராமாயணம். வான்மீகியும் இராமரும் சம காலத்தவர். இராமர் தென்றிசைக்குச் சென்றபோது அகத்தியரிடம் வில்லம்பு பெற்றனர். அகத்தியர் தம் இசையறிவால் இராவணனை வென்று அவனைத் தமிழ்நாட்டிற் காலிடாவண்ணம் செய்திருந்தார்.

சுக்கிரீவன் சீதையைத் தேடுமாறு அனுமானைத் தென்றிசைக் கனுப்பும்போது,

66


அவ்வாறே ஆந்திரம், புண்டரம், சோளம், பாண்டியம், கேரளம் முதலிய நாடுகளையும் காண்பீர்கள்.... அந்த மலயமலையின் சிகரத்திலே ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியையுடைய முனி சிரேஷ்டரான அகத்தியரைக் காண்பீர்கள்.... அதைவிட்டு அப்பாற் சென்றால் முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய பொன்மயமான பாண்டிய நாட்டின் கதவைக் காண்பீர்கள். (இதுவே கபாடபுரம்.) அதன்பின் தென் சமுத்திரத்தை யடைந்து பின்பு செய்யவேண்டியதை நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின்கண்ணே மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளை யுடையதும், பொன்மயமானதும், நானாவித மரங்களு ம் கொடிகளும் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டம் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை முழுகிக் கிடக்கின்றது” என்று சொன்னதாக வால்மீகியிராமாயணம் (மொழிபெயர்ப்பு) கிஷ்கிந்தா காண்டத்திற் கூறப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் ஜமதக்கினியின் புதல்வரென்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். ஜமதக்கினி பரசுராமரின் தந்தை. பரசுராமரும் இராமரும் சமகாலத்தவர். ஆகவே எவ்விதத்திலும் இடைச்சங்க காலமே இராமாயண காலமாதலறிக.

அகத்தியர் இராமாயண காலத்துக்கு முன்பே தென்னாடு வந்தவர். இக்காலத்திற் றெரியும் தமிழிலக்கணிகள் எல்லாரிலும் முற்பட்டவராதல்பற்றி அவரைத் தமிழரென்று சொல்லுதல் பொருந்தாது. அகத்தியர் காலத்தி லிருந்து தமிழை வளர்த்தவர் பெரும்பாலும் ஆரியரேயாவர். அவர்க்குத்