உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

பண்பாட்டுக் கட்டுரைகள்

தெய்வங்களுக்கு மரத்தடியில் கல் நட்டு, முழுக்காட்டி, ஆடு கோழியறுத்துக் காய்கறி சோறு படைப்பர். இறந்தோரையும் வணங்குவர்; அமாவாசை யன்றாவது முழு நிலாவின் பின் 11ஆம் நாளாவது நோன்பிருப்பர்.

பாணர் எல்லாரும் பார்ப்பார், நாயர், கம்மாளர், ஈழவரிடம் உண்பர். பாணரும் கணியரும் தொட்டுக்கொண்டால் ஒருவரை யொருவர் தீட்டுப்படுத்தியவராவர்; பின்பு குளித்துத் தீட்டைப் போக்குவர். பாணர் ஈழவர் அருகில் குடியிருக்கலாம். ஆனால், நாயர் தரையில் குடியிருக்க முடியாது. கம்மாளர் கிணற்றில் தண்ணீரெடுக்கவும், பார்ப்பனர் கோயிலின் புறமதிலையண்டவும், பாலக்காட்டில் பார்ப்பனர் தெருவழிச் செல்லவும் இவர்க்கு உரிமையில்லை. 1891ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

- “செந்தமிழ்ச் செல்வி" மேழம் 1939