உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாணர்

87

பாணர்க்கு மக்கள் தாயமே. பெண்டிர் பல சகோதரரை மணப்ப துண்டு. தென் மலபாரில், பாணர்க்குள் திருரெங்கன், கொடகெட்டி (குடைகட்டி), மீன்பிடி, புள்ளுவன் என நாற் பிரிவுண்டு. இவருள் புள்ளுவன் ஏனையரிலும் தாழ்ந்தவன். பாணர் கலப்பு மணமுள்ள பல இல்லங்கள் அல்லது கிரியங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். காளி, பரகுட்டி, கரிங்குட்டி, குளிகன், குட்டிச்சாத்தான் என்பன இவர் தெய்வங்கள். இவர் உச்சவேலி என்னும் வகுப்புப் பேய்களை ஓட்டுவர்.

ஒரு பாணன் தன் ஆடையில் ஓர் இழையெடுத்துத் தன் மைத்துன னிடம் கொடுத்து உன் பரிசம் முடிந்தது என்று கூறினால் தன் மனைவியை முற்றும் தள்ளியதாகும்.

மலையாளப் பாணருள், அஞ்ஞூற்றான், முந்நூற்றான் என இரு உட்பிரிவுகளுண்டு. திருவாங்கூர்ப் பாணர்க்குப் பணிக்கப் பட்டமுண்டு. இவர் தமிழப் பாணரினுந் தாழ்ந்தவர். இவர் மேற்குலத்தார்க்கு 36 அடித் தூரம் விலகுவர்; மன்னாரையும் வேடரையும் 8 அடித் தூரத்தும் புலையரை யும் பறையரையும் 32 அடித் தூரத்தும் தம்மினின்றும் விலக்குவர். இவர் மயிர்வினையும் சலவையும் தாமே செய்துகொள்வர்; கம்மாளரிடத் துண்பர்; ளமை மணஞ் செய்வர்; இறந்தோரைப் புதைப்பர். இவர்க்குச் சாவுத்தீட்டு 16 நாள். இயல்பாய் இறந்தவர்க்கு ஆடி மாதத்திலும், கொலையுண்டு அல்லது துன்பநேர்ச்சியில் இறந்தவர்க்கு ஆவணி மாதத்திலும் ஊனுங் கள்ளும் படைப்பர். இது வெள்ளங்குளி யெனப்படும். இறந்தவரை நினைவுகூரப் பந்தல் மடம் முதலியன அமைப்பதுண்டு.

ஈழவர் தமது கொண்டாட்டங்களில், பாணர்க்கு ஈராள் உண்டி யளித்துத் தம் முன்னோர்க்கு அவர் முன்னோர் செய்த ஓர் நன்றியை நினைவுகூர்வர்.

பாலக்காட்டில் பாணர் தலைவனுக்குச் சுப்ரதன் என்று பெயர். அவன் இறந்தால் அரசனுக்கு அறிவிக்கப்படும். அரசன் வாள், கேடகம், ஈட்டி, துப்பாக்கி, வெடிமருந்து, வெள்ளிக் காப்பு, அட்டிகை என்னுமிவற்றை அவன் மகனுக்காவது இழவு கொண்டாடுபவனுக்காவது அனுப்புவன். மகன் அணிகளையும், வேறு சிலர் ஆயுதங்களையும் அணிந்துகொள்வர். பிணத்தை எடுக்கும்போது ஒன்றும், கிடத்தும்போது ஒன்றும், எரித்தபின் ஒன்றுமாக 3 வெடி சுடுவர். மறுநாள் மகன் தன் கையாற் செய்த ஓர் தாழங் குடையை அரசனுக்களிப்பன். அரசன் அவனுக்குச் சுப்ரதன் என்னும் பட்டமளிப்பன்.

சங்கிலிக்கருப்பன், பேச்சி, ஊதர கருப்பன், காளி, சோதல கருப்பன், சோதல பத்ரகாளி, யட்சி, கந்தர்வன், அனுமான் என்று ஆவிகளைப் பாணர் வயப்படுத்துவர்.

பாணர் மதம் பேய் வணக்கம், மூக்கன், சாத்தன், கப்பிரி, மலங் கொறத்தி (குறத்தி) என்னுந் தெய்வங்களையும் இவர் வணங்குவர். இத்