உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

தமிழியற் கட்டுரைகள்

ஆவிற்குக் கோவென்றும் பெயர். முல்லை நிலத்தார்க்கு அல்லது இடையர்க்கு ஆ என்னும் பெயரினின்று ஆயர் என்னும் பெயர் ஏற்பட்டது. கோ = பசு (பிங்.) எருது (இ.வி. 9072).கோ என்னும் சொல் வடமொழியி லிருப்பதால் அது வடசொல்லாகி விடாது. ஆங்கிலத்திலும் அது (A.S.Cu. Ger. Kuh. S. Go.) Cow என்று வழங்குகின்றது. நூற்றுக்கணக்கான தூய தென்சொற்கள் மேலையாரிய மொழிகளினுஞ் சென்று வழங்குகின்றன. தா என்னும் வினைச்சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது. உலக வழக்காலும் “தாவென் கிளவி ஒப்போன் கூற்றே” என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆயினும், அதன் தொழிற்பெயரான தானம் என்பது வடமொழிச் சென்று வழங்கி வடசொல்லாகக் கருதப்படுகின்றது. தா என்னும் வினை இந்தியில் தேவ் என்றும் இலத்தீனில் தோ (do) என்றும் வழங்கு கின்றது. Donum donation முதலிய ஆங்கிலச் சொற்கள் இலத்தீனிலிருந்து வந்தவை. இங்ஙனம் எத்தனையோ சொற்களுள. அவற்றுள் குடி (LCot) என்பதும் ஒன்று. இதன் விளக்கத்தைக் கால்டுவெல் ஐயரின் ஒப்பியல் இலக்கணத்தின் முன்னுரையிற் கண்டு தெளிக.

கோ+அன்=கோவன் = இடையன் "கோவ னிரை மீட்டனன்”

(சீவக.455

கோவன் என்னும் பெயர் கோன் என்று குறுகும். அதன்மேல் ‘ஆன்` விகுதிபெற்றுக் கோனான் என நிற்கும். கோனார் என்னும் பெயர் குடிப்பெயராய்த் தொன்று தொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது.

கோவன் என்னும் ஆயன் பெயரே திரியாதும், கோன் கோ எனத் தொக்கும் ஈறுகெட்டும் அரசனைக் குறித்தது. குடிகள் ஆக்களும் அரசன் ஆயனும் போல்வர் என்னுங் கருத்தில், அரசன் கோவன் எனப்பட்டான். கோவன் = அரசன். “கோவனும் மக்களும்” (சீவக. 1843). அரசன் கையிலுள்ள செங்கோலும் அவன் ஆயன் போன்றவன் என்னுங் கருத்தை வலியுறுத்தும். கிறித்தவரின் சமயாசிரியர் ஆங்கிலத்தில் Shepherd என்றும் Pastor என்றும் அழைக்கப்பட்டதும் இக்கருத்துப்பற்றியே. கடவுள் அனைத்துலகுக்கும் அரசனானதாலும் ஆயன் ஆநிரையைக் காப்பதுபோல் அவர் மக்களைக் காத்து வருவதாலும், அவரும் கோவன் எனப்பட்டார்.

கோவன் = சிவன் (அக.நி)

பசு என்னும் வடசொல் கொள்கை நூலில் மக்களை அல்லது உயிர்களைக் குறிப்பது கவனிக்கத்தக்கது. ஆயா என்னும் தமிழ்ச் சொல் காட்டுப் பசுவைக் குறிக்கும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெறின், ஆமா என்பது ஆன்மா என்றாகும். ஆனாகிய மா என்பது இதன்பொருள். இச் சொல்லே வடமொழியில் ஆத்மா என்றாகும். ஆன்மா என்னும் தென்சொல் உயிரையும் ஆத்மா என்னும் வடசொல் உடம்பையும் சிறப்பாய்க் குறித்தலை நோக்குக.