ஆவுந் தமிழரும்
6
85
பொருளும் ஆவின் வாய்ப்பட்டால் ஆக்கமாம் என்னுங் கருத்தில், 'பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே' என்னும் பழமொழி யெழுந்தது. தான் உண்டதை மீட்கும் தன் வாய்க்குக் கொணர்ந்து அசையிட்டுச் செரிக்கச் செய்வதுபற்றி, ஆவானது தலை மாணாக்கர்க்கு உவமையாகக் கூறப்பட்டது.
ஆவின் தினவு தீர்த்தற்பொருட்டு, ஆவுரிஞ்சியென்றும் ஆவுரிஞ் சுதறியென்னும் ஆதீண்டு குற்றியென்றும் சொல்லப்பட்ட தறிகள் ஊர்தொறும் நட்டப்பட்டிருந்தன.
மக்காளல் வாழ்த்தப்படும் பொருள்களுள் ஆவும் ஒன்றாயிற்று. 'ஆறுமுறை வாழ்த்து' என்னும் தொல்காப்பியப் பகுதியுரையில் (தொல். பொ. 81) “முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்” என்னும் அறுவரை வாழ்த்தல் என்று உரைத்தனர் நச்சினார்க் கினியர். மக்கள் நல்வாழ்விற்கு ஆவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தே அதை வாழ்த்தினர் தமிழர்.
"வாழ்க அந்தணர் வாழ்க ஆனினம்”
என்றார் திருஞான சம்பந்தரும்.
அந்தணர் – முனிவர். பார்ப்பார் நூல் பார்ப்பவர். தமிழகத்தில் முதலாவது பார்ப்பார் என்றிருந்தனர் தமிழர். பின்னர் பிராமணரும் தொழிலொப்புமை பற்றிப் பார்ப்பார் எனப்பட்டார். முதலாவது, செம்மார் என்னும் தமிழ் மரபினர் செருப்புத் தைத்துக் கொண்டிருந்து, பின்பு வடக்கிருந்துவந்த சக்கிலியரென்னும் தெலுங்கரும் தொழிலொப்புமை பற்றிச் செம்மார் எனப்படுதல் காண்க.
ஆ க்கள் மக்களைப்போல் மட்டுமன்றி அவரினும் மேலாகத் தூய்மை அல்லது தெய்வத் தன்மையுடையனவாகவுங் கருதப்பட்டன. ஒரு நாட்டிலுள்ள ஆநிரை கள்வரால் அல்லது பகைவராற் கவரப்படின், அது தூய்மைக் குலைச்சலாகவும் பேரிழப்பாகவும் கருதப்பட்டு கடும்போருக்குக் காரணமாயிற்று. ஆன்மடியறுத்தல் மாபெருங் குற்றமாயிற்று. ஆக கொலையோ சொல்ல வேண்டுவதில்லை.
ஆன்முலை யறுத்த அறனில் லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவே"
என்றார் ஆலத்தூர்கிழார். எனினும், அது நன்றிமறந்த குற்றத்தை மிகுத்துக் காட்டற்கேயென வறிக.
தீயன செய்யாத செங்கோன் மன்னரும் வேற்று நாட்டைக் கொள்ளக் கருதின் அந்நாட்டு ஆநிரையைத் தன் மறவர் வாயிலாய்க் கவர்ந் தோம்பினர். சில இடங்களில் ஆவிற்குக் கோயிலெடுத்தும் வழிபட்டனர். இது பகுத்தறிவிழந்த காலத்தில் நிகழ்ந்தது.