உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தமிழியற் கட்டுரைகள்

ce

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்ர்

காவலன் காவான் எனின்”

என்று வள்ளுவர் கூறுவதால் ஆவின் பயம்பாடு உணரப்படும்.

ce

ஆவிற்கு நீரென் நிரப்பினும் நாவிற்

கிரவின் இளிவந்த தில்"

(குறள். 560)

(குறள்)

என்பது இரவைக் கண்டிப்பினும், ஆவின் அருமையை உணர்த்தாது போகவில்லை.

ஆவும் ஆவேறும் (காளையும்) மிகப்பயன்படுவது பற்றி அவற்றின் வரவு கண்டு முறையே ‘என் அம்மை வந்தாள். அவளுக்குப் புல்லிடு’, ‘என் அப்பன் வந்தான். அவனுக்குத் தண்ணீர் காட்டு' என்று அன்புரைகளைக் கூறிவந்தனர் உழவர். இவை திணைவழுவுக் கெடுத்துக் காட்டாக இலக்கணத்தில் வழிவழி கூறப்பட்டன. அதோடு, சாத்தன் சாத்தி கொற்றன் கொற்றி முடவன் முடத்தி கொடும்புறமருதன் கொடும்புறமருதி முதலிய மக்கட் பெயர்களையே ஆவுக்கும் ஆவேற்றுக்கும் இட்டு அழைத்தனர். இவை, இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் என மூவகை விரவுப் பெயராகத் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன. (சொல். 174) 'சாத்தன் வந்தது’ 'முடவன் வந்தது’ ‘சாத்தன் புற்றின்னும்', 'சாத்தி கன்றீனும்' முதலிய சொல்லதிகாரவுரை யெடுத்துக் காட்டுகளை நோக்குக.

காளை மக்கட்காக மிக உழைத்தலினால் 'மாடுபோலுழைத்தல் என்னும் வழக்கெழுந்தது. காளை விடலை என்னும் பெயர்கள் உவமை யாகு பெயராக மறவர்க்கும் குறும்பரசர்க்கும் வழங்கிவந்தன. இடையூற்றைப் பொருட்படுத்தாமல் எடுத்த காரியத்தை முடிக்கும் திறவோன் பகடெனப் புகழப்பட்டான்.

"மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கன் இடர்ப்பா டுடைத்து"

(குறள். 624)

இளைஞரின் வலிமையை யறிதற்கு ‘ஏறுதழுவல்' (கொல்லேற்றைப் பிடித்து நிறுத்தல்) அளவையாகக் கொள்ளப்பட்டது. முல்லை நிலத்திலுள்ள ஆயரும் ஏறுதழுவின இளைஞர்க்கே பெண் கொடுத்து வந்தனர்.

ஆவின் வாலையும் எருதின் வாலையும் பற்றி ஆழமான ஆற்றைக் கடந்தனர். எருது ஊர்தியாக உதவிப் பொதியுஞ் சுமந்தது. இன்றும் வண்டியிழுக்கின்றது.

ஆவும் ஆவேறுமாகிய இரண்டும் மக்கட்குப் பயன்படுவேனும் அவற்றுள், ஆவே அமைதியுடைமையும் அமுதளித்தலும் இருபாற்கன் றீனுதலும் பற்றிச் சிறப்பாகப் போற்றப்பட்டது. 'பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தாற் புலிபோல' என்பது பழமொழி. ஆவுக்கு வாயுறை முப்பத் திரண்டறக் கொடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. இழக்கும்

7