உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தமிழியற் கட்டுரைகள்

இங்ஙனம் காதலி அல்லது கற்புடை மனைவி முதலாவது தன் காதலலுக்கு இணையற்ற இன்பம் பயக்கின்றாள்.

இரண்டாவது, கணவன் களவில் கூட்டந்தடைப்பட்டவழி மடலேறியும் பிதற்றியும், நிறையழிந்து பெருமையிழந்த விடத்தும், காதலி நிறைய யழியாது அடக்க வொடுக்கமாயிருக்கின்றாள்.

கடலன்ன காம முழுந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.'

என்றார் திருவள்ளுவர்.

୧୧

'எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான" "செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான”

என்பன தொல்காப்பியம்.

(குறள்.)

(அகத்திணை இயல், 38)

(பொருளியல், 15)

ஆகவே, அறிவு, நிறை, ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற்கே யுரியவையல்ல என்பது வெளியாம். அறிவுள்ள விடத்தில் ஏனை மூன்றும் அமையும். பெண்பாற்கும் அறிவுண்டென்பது இருவகை வழக்கிலும் கண்டதே. காதலன் தன்னைக் கைப்பற்றிய விடத்துக் கத்தினும், தாய்வந்தபோது அவனுக்குத் தண்ணீர் விக்கியதென்று சொல்வது, அறிவோ? அறிவின்மையோ? பெண்டிரிடைக் கல்வி பரவின் அவரும் ஆடவர்போல் அறிவுபெறுதல் திண்ணம்.

மூன்றாவது, கரணத்தின்பின் கணவன் தன்னைக் கைவிட்டுப் பரத்தையிற் பிரிந்த விடத்தும் மறுமணஞ் செய்த விடத்தும், காதல் மனைவி அவன்மாட்டு கடுகளவுங் காதல் குன்றாதிருக்கின்றாள். அவன் ஆணை பொய்த்தனிமித்தம் அவனுக்குத் தீங்கு நேராதபடி தெய்வத்தையும் இரவும் பகலும் வேண்டுகின்றாள். தன் பெற்றோரையும் விட்டு விட்டு, எத்துணைச் சிறந்தவனாயினும் வேறொருவனையும் கனவிலும் கருதாது, தன்னையே தெய்வமாக இறுகப்பற்றிக்கொண்டிருக்கும் மெல்லியலை மறந்து அவள் உயிரோடிருக்கும்போதே அவள் கண்ணெதிரே வேறொருத்தியை மணக்கும் ஆடவன் வன்மைதான் என்னே!

நான்காவது, தலைவன் தனக்கு எத்துணைத் தீங்கு செய்யினும் அதைப் பொருட்படுத்தாதும் தன்னலங் கருதாதும் கருதாதும் அன்னையும் அடியாளும் அமைச்சியும் போலப் பல்வகையிலும் அவனுக்குப் பணிவிடை செய்கின்றாள். கற்புடை மனையாள் தான் கணவனுக்கென்றே வாழ்ந்து அவனில்லாதபோது அலங்கரிப்பதும், சிறக்க உண்டுடுத் துறங்குவதும் ஒழிகின்றாள். கணவன் தனக்குச் செய்யுங் கொடுமையைத் தாய் கூறினும் கடிந்து அவன் இயற்படமொழிகின்றாள்.