கோசர் யார்?
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயனெறி மரபில்நின் வாய்மொழி கேட்ப
மகிழ்ந்தினி துறைமதி பெரும"
105
(மதுரைக். 771-79)
என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடப்படுவதால், பாண்டி நாட்டிலும்,
செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினும்”
"பல்லார்க்கும் ஈயும் பரிசிற் கொடைத்தடக்கை
(அகம். 90)
என்பதால் சோழநாட்டிலும்,
மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன்-மல்லலந்தார்
செஞ்சொல் செருந்தைதன் தென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்குல் வந்து"
(யாப்பருங்கலவிருத்தி. ஒழிபியல்)
என்னும் பழம் பாட்டால், உறையூரிலும்,
"கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து
(சிலப். உரைபெறுகட்டுரை)
என்பதால், கொங்கு நாட்டிலும்,
"கோசர் துளுநாட்டன்ன”
என்பதால், துளுநாட்டிலும், கோசர் வதிந்திருந்தமை புலனாம்.
(அகம். 15)
கொங்குநாடு பிற்காலத்தில் மூவேந்தரிடையும் பிற சிற்றரசரிடையும் அடிக்கடி கைமாறி வந்திருப்பினும், முற்காலத்தில் சேரர்க்கே உரியதா யிருந்திருத்தல் வேண்டும் என்பது,
"சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்”
என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், தகடூராண்ட அதிகமான்குடி வரலாற்றாலும், பிறவாற்றாலும், அறியப்படும்.
கடைக்கழகக்காலத்தில், முத்தமிழ்நாட்டிலும் ஆங்காங்கிருந்த குறுநிலமன்னர் தத்தம் வலிமிக்க காலத்து, தத்தம் வேந்தர் தலைமையினின்று திறம்பியதொடு அவர் நாட்டையும் கைப்பற்றினர் என்பதற்கு.
..
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி” தித்தன் உறந்தை”
(அகம். 205)
(அகம். 122)
என்பன சான்றாம். இம்முறையே, கொங்கும் துளுவும் கோசர் வயிற்பட் டிருத்தல் வேண்டும். இளங்கோவடிகள் "குடகக் கொங்கர்’ என
·
77