உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தமிழியற் கட்டுரைகள்

வரந்தருகாதையிற்குறித்தது, ஒருகால், குடகுநாட்டுக் கோசரை நோக்கியதா யிருக்கலாம். துளுவும், குடகும் ஒரு காலத்தில் குடகொங்குப் பகுதிகளாக விருந்தன. “குடகக் கொங்கர்” என்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க.

திருநெல்வேலி மாவட்டக் கல்லிடைக்குறிச்சீத் திருமால் கோவி லுக்குக் கோசர்குடி பெருமாள் கோவில் என்று பெயர். அதே மாவட்டத்துக் கழுகுமலையில் ஒரு தெருவிற்குக் கோசர்க் குடித் தெரு என்று பெயர். கோசருட் பெருந்தமிழ்ப் பாவலரான நல்லிசைப் புலவரும் இருந்தனர் என்பதை,

"செல்லூர்க்கோசனார்" "கருவூர்க்கோசனார்"

என்னும் பெயர்கள் காட்டும்.

(அகம். 66). (நற்றிணை, 214)

இவையெல்லாம், கோசர் தமிழ்நாட்டிற் கொங்கில் மட்டுமன்றி எங்கும் வதிந்தவர் என்றும், அவர் தமிழரே என்றும், தெரிவிக்கும்.

வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் இனத்தாரான திரவிடருமே பரவியிருந்ததினால், அகத்தியர் (காசுமீரத்) துவராவதியினின்று பதினெண்குடி வேளிரைத் தென்னாடு கொண்டுவந்தனரென்பதும், காசுமீரநாட்டு வரலாறு கூறும் இராசதரங் கணியில் அந்நாட்டார் கோசம் என்னும் ஒரு சூள்முறையைக் கையாண் டமை கூறப்பட்டிருப்பதும், கோசநாடு எனப் பெயரிய சுனைத்தடம் காசுமீரநாட்டிலுண்மையும், உதயணன் தாய் சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவரான பேர்கோன் கலிக்காமநாயனாரின் குலமாயிருந்ததும், கோசர் வடநாட்டினின்று வந்தவர் எனக் காட்டும் சான்றாகா.

மூலப்படை, கூலிப்படை; நாட்டுப்படை, காட்டுப்படை; பகைப் படை, துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் அறுவகைப் படையுள்; நாட்டுப்படை என்பது படைமாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும், காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும். படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே.

"வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”

"வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”

(தொல் மரபியல். 80)

(தொல் மரபியல். 81)

என்பவற்றால், நாட்டுவாணராகிய (உழுவித்துண்ணும்) வேளாளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்).

முடியொழிந்த,

"வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் மாலையும் தேரும் வாளும்”

(தொல். மரபியல். 83)