134
தமிழியற் கட்டுரைகள் கணுக்கால் வரை இருகாலும் மறையத் தொங்கவிட்டு. மற்றொரு புறமுந்தியை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வால்தாறாவது; வட்டத்தாற்றொடு பின்னால் வால் விட்டுக் கட்டுதலாம். இது ஒற்றை வால்தாறு; இரட்டை வால்தாறு என இருவகைப்படும். முன்பக்கத்தி லிருந்து ஒரு கீழ் முந்தியை மட்டும் பின்னாற் கொண்டுபோய் இடக்காற் பக்கமேனும் வலக்காற்பக்கமேனும் நடுவிலேனும் வால்விட்டுச்செருகுவது ஒற்றை வால்தாறு என்பதாம். இரு கீழ் முந்தியையும் முன்போற் காண்டுபோய் வலக்காற்பக்கம் ஒன்றும் இடக்காற் பக்கமொன்றுமாக இருவால் விட்டுச் செருகுவது இரட்டை வால்தாறு என்பதாம். மொட்டைத் தாற்றுக்கு நான்கு முழழும், வட்டத்தாற்றுக்கு ஐந்து முழமும், வால் தாற்றுக்கு ஆறு முழமும், ஆடை வேண்டும். இவை, முறையே, ஒன்றினொன்று மதிப்பானவை. ஆதலால், கல்லாப் பொதுமக்களும் கல்லாப் பெரு மக்களும் கற்ற பெருமக்களும் இவற்றை, முறையே, கையாள்வர். இது தொன்றுதொட்ட வழக்கம்.
உ
கல்லாப் பொதுமக்கள் பெரும்பாலும் உழைப்பாளிகளாதலின், மதிப்பு வேண்டாமையொடு உழைப்பு வசதியும் மொட்டைத்தாற்றையே அவர்க்குரியதாக்கும். ஊக்கமாய் வினைசெய்யும் உழைப்பாளிகள், சிறப்பாக உழவர், மொட்டைத்தாற் றுடையும் மிகையெனக் கருதி நீர்ச்சீலை (கோவணம்) யொன்றே யணிந்து வினைசெய்வர்.
எவ்வுழைப்பு வினையையும் ஊக்கமாய்ச் செய்ய முனையின், அரையாடையை இறுகக் கட்டிக்கொள்வது மாந்தர் இயல்பு. அதனால்,
୧୧
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.
(குறள்.)
என்று, தெய்வத்தின் மேலும் தற்றுடுத்தலை ஏற்றிக் கூறினார் திருவள்ளுவர். ஒரு வினையை முனைந்து செய்வதற்கு அரையில் ஆடையை இறுக்கிக் கட்டினால் மட்டும் போதாது; கீழ்ப் பாய்ச்சியுங் கட்ட வேண்டும்.
தற்றுடுத்தலெனினும் தாறு பாய்ச்சிக் கட்டுத லெனினும் ஒன்றே. தறுதல்-இறுகக் கட்டுதல் அல்லது உடுத்துதல். தற்றுடுப்பது தாறு. (முதனிலை நீண்ட தொழிலாகுபெயர்). தறு-தாறு. ஒப்பு நோக்க:இறு-ஈறு, உறு-ஊறு. தறுக்கணித்தல்:
1. உணவுப்பொருள் இறுகுதல்.
2. சதை அல்லது புண் காய்த்துப் போதல்.
3. பழங் கன்றிப் போதல்.
வழி நடைக்குக்கூட, சுற்றிக் கட்டுவதினும் தாறுபாய்ச்சிக் கட்டுதலே வசதியானது; அல்லாக்கால், கால் தட்டும், வெட்டும்; துணி பிதிரும், கிழியும்.