உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தற்றுடுத்தல்

135

கி.மு. 3000 ஆண்டுகட்குமுன் மேனாடுகளில் துணி நெய்யப்பட வில்லை யென்றும், இந்தியாவினின்றே ஏற்றுமதி யாயிற்றென்றும், வயவர் சான் மார்ஷல் (Sir John Marshall) கூறுகின்றார். இதற்குச் சான்றாக, பருத்தியும் பஞ்சும் துணியும் பற்றிய தமிழ்ப் பெயர்கள் இன்றும் மேனாடுகளில் வழங்குகின்றன.

பன்னல் – பருத்தி.

L. Punnus-Cotton.

It. Panno-Cloth.

கொட்டை, கொட்டான். - பஞ்சு.

Ar. Qutun, It. Cotone.

Fr. Coton, E. Cotton.

பருத்திப் பஞ்சைக் கொட்டையென்றும் கொட்டானென்றும் கூறுவது நெல்லை நாட்டு வழக்கு.

E. Calico-Cotton Cloth.

மலையாள (பழஞ்சேர) நாட்டுத் துறைமுகங்களுள் ஒன்றான கோழிக்கோட்டிலிருந்து ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் ‘காலிக்கோ’ எனப்பட்டது. 'கோழிக்கோடு' இன்று கள்ளிக் கோட்டை என மருவி வழங்குகின்றது. இம்மரூஉ. (Calicut என்னும்) ஆங்கிலப் பெயர் வடிவைத் தழுவியது:

பண்டை மேனாட்டார் ஆடையைச் சுற்றிக் கட்டினரே யன்றித் தற்றுடுத்தினதில்லை. கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்குப் பின் இந்தியாவிற் புகுந்த வேத ஆரியர், ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்ததனால், அவரும் மெல்லாடையைத் தற்றுடுத்தியதுமில்லை; தமிழர்போற் கடுமையாய்ப் பலதுறையில் உழைத்ததுமில்லை.

கவே, தாறுபாய்ச்சிக் கட்டுதல் தொன்று தொட்ட தமிழர் வழக்கேயென்றும், அதனைக் குறிக்குஞ் சொல்லும் தூயதமிழ்ச் சொல்லேயென்றும், பிராமணர் கட்டும் பஞ்சகச்சமும் தமிழர் தற்றுடுத்தலின் வேறுபாடேயென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.